இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து நடத்தப்பட்டு வரும் உள்ளூர் டி.20 தொடரான ஐபிஎல் தொடரில் இதுவரை 13வது சீசன்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த வருடத்திற்கான தொடர் ஏப்ரல் மாதம் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்கான ஏலம் சென்னையில் நடைபெற்றது. இதில் ஒவ்வொரு அணியும் தங்கள் கைவசம் இருக்கும் தொகையை வைத்து தங்களுக்கு தேவையான வீரர்களை ஏலத்தில் எடுத்தன.
இந்த ஏலத்தில் யாருமே எதிர்பார்க்காத சில இளம் வீரர்கள் பல கோடி ரூபாய்க்கு ஏலம் போனது பலருக்கு ஆச்சரியத்தை கொடுத்தது. ஷாருக் கான், கெய்ல் ஜேமிசன் போன்ற இளம் வீரர்கள் பலர் நல்ல விலைக்கு ஏலம் போனது நல்ல விசயம் தான் என்றாலும், மறுமுனையில் ஆரோன் பின்ச் போன்ற சீனியர் வீரர்களை எந்த அணியும் கண்டு கொள்ளாதது பலருக்கு ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. சமகால கிரிக்கெட் உலகின் ஜாம்பவனாக திகழும் ஆரோன் பின்ச் போன்ற வீரர்களுக்கான மரியாதை கிடைக்காதது சரியானது அல்ல என முன்னாள் வீரர்கள் பலர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து ஆஸ்திரேலியா அணியின் அதிரடி வீரர் மற்றும் ஆஸ்திரேலிய அணியின் டி20 தொடரின் கேப்டனுமான ஆரோன் பின்ச் இடம் கேள்வி கேட்கப்பட்டது,அதற்கு அவர் நான் தேர்வாக மாட்டேன் என்று எதிர்பார்த்தேன் அதேபோன்று நடந்துவிட்டது என்று கூறினார். இவரின் இந்த பதிலுக்கு கிரிக்கெட் வட்டாரங்களில் பெரும் அதிருப்தி நிலவியது.

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் கூறியதாவது,நீங்கள்தான் ஆஸ்திரேலிய அணியின் டி20 கேப்டன் இந்நிலையில் நீங்களே இவ்வாறு கூறலாமா என்று கேள்வி எழுப்பியுள்ளார்,ஒரு போட்டியில் சொதப்பினால் என்ன அடுத்த போட்டிகளில் நான் சிறப்பாக செயல்படுவேன் என்று தான் கூற வேண்டும். அதற்கு பதில் நான் தேர்வாக மாட்டேன் என்று எனக்கே தெரியும் என்று கூறுவது அவமானகரமான செயல் ஆகும் என்று கடுமையாக சாடினார்.