இப்படிப்பட்ட ஐபிஎல் தொடரில் இவர் விளையாடுவதற்கு சும்மாவே இருக்கலாம் ! - மைக்கேல் கிளார்க் கருத்து 1

2021ம் ஆண்டு நடைபெற இருக்கும் 14வது ஐபிஎல் சீசன் ஏப்ரல்/மே மாதம் நடத்துவதற்கு பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. எனவே இந்த 14வது ஐபிஎல் சீசனுக்காக அனைத்து அணிகளும் தற்போது தீவிரமாக தயாராகி வருகின்றனர். ஐபிஎல் போட்டி நடைபெறும் தேதி மற்றும் இடம் இன்னும் அறிவிக்கப்படவில்லை. பிசிசிஐ தலைவர் கங்குலி இதற்கான முடிவு விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார். 

 இந்நிலையில் இந்த ஐபிஎல் சீசனுக்கான மினி ஏலம் கடந்த பிப்ரவரி மாதம் 18ம் தேதி நடைபெற்றது. இந்த மினி ஏலத்தில் கிறிஸ் மோரிஸ் -16.25 கோடி, கைல் ஜாமிசன் – 15 கோடி, மேஸ்வெல் – 15 கோடி, ஜெய் ரிச்சர்ட்ஸன் – 14 கோடி, கிருஷ்ணப்ப கவுதம் – 9.25 கோடி, மெரிடித் – 8 கோடி ஆகியோர் அதிக விலைக்கு எடுக்கப்பட்டார்கள். 

இப்படிப்பட்ட ஐபிஎல் தொடரில் இவர் விளையாடுவதற்கு சும்மாவே இருக்கலாம் ! - மைக்கேல் கிளார்க் கருத்து 2

இந்நிலையில், ராஜஸ்தான் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் தனது மோசமான ஆட்டம் காரணமாக அணியில் இருந்து வெளியேற்றப்பட்டார். ஐபிஎல் ஏலத்தில் ஸ்டீவ் ஸ்மித்தின் ஆரம்ப விலை 2 கோடி என அறிவித்தனர். ஆனால் ஸ்டீவ் ஸ்மித்தை அணியில் எடுக்க எந்த அணியும் முன்வரவில்லை. இறுதியாக டெல்லி அணி 20 லட்சம் அதிகப்படியாக கேட்டு 2.2 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தனர். சர்வதேச வீரரை வெறும் 2.2 கோடி எடுத்திருப்பதால் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் கருத்து தெரிவித்திருக்கிறார்.

இப்படிப்பட்ட ஐபிஎல் தொடரில் இவர் விளையாடுவதற்கு சும்மாவே இருக்கலாம் ! - மைக்கேல் கிளார்க் கருத்து 3

இது குறித்து பேசிய மைக்கல் கிளார்க் “ஸ்மித் சிறந்த வீரர் ஆவார். இவரது திறமைக்கு கிடைத்த தொகை இது கிடையாது. குறைந்த விலையில் எடுத்திருப்பதால் அவர் ஐபிஎல் தொடரில் போலியான காரணங்கள் ஏதாவது சொல்லி விளையாடுவதை தவிர்ப்பார். இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ஸ்மித் விளையாடுவது சந்தேகமாகத்தான் இருக்கிறது. இதில் விளையாடுவதற்கு அவர் தனது குடும்பத்துடன் நேரம் செலவிட தயாராகவார். ஆனால் டெல்லி அணியில் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் இருப்பதால் ஸ்மித் விளையாட வாய்ப்பு இருக்கிறது”  என்று கூறியிருக்கிறார்.

இப்படிப்பட்ட ஐபிஎல் தொடரில் இவர் விளையாடுவதற்கு சும்மாவே இருக்கலாம் ! - மைக்கேல் கிளார்க் கருத்து 4

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *