இந்திய கிரிக்கெட் வாரியம் செய்யும் தவறுகளை எல்லாம் கேள்வி கேட்க கூட தைரியம் இல்லாமல் ஐசிசி மவுனம் காத்து வருவதாக முன்னாள் வீரர் மைக்கெல் வாகன் தெரிவித்துள்ளார்.

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி, இந்திய அணியை மிக இலகுவாக வீழ்த்தி அபார வெற்றி பெற்றதால், இந்திய அணி இந்த தொடரில் ஒரு போட்டி வெல்வதே மிக கடினம் என எதிர்பார்க்கப்பட்டது.

இதில் குறிப்பாக முதல் போட்டி நடைபெற்ற அதே சேப்பாக்கம் மைதானத்திலேயே இரண்டாவது போட்டியும் நடைபெற்றதால், இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் இங்கிலாந்து அணியே வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முன்னாள் வீரர்கள் பலரின் கணிப்புகளை தவிடு பொடியாக்கிய இந்திய அணி,இரண்டாவது போட்டியில் 317 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மிகப்பெரும் வெற்றியை பதிவு செய்தது.

இந்தியாவ கேள்வி கேக்க கொஞ்சம் கூட தைரியம் இல்லையா..? மைக்கெல் வாகன் கோபம் !! 2

இதனையடுத்து அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற இரு அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டி வெறும் இரண்டே நாளில் நிறைவடைந்துவிட்டதால் இந்த போட்டியும், இந்த போட்டி நடைபெற்ற ஆடுகளமும் மிகப்பெரும் சர்ச்சையையும் விவாதத்தையும் ஏற்படுத்தியது. இது போன்ற ஆடுகளங்கள் டெஸ்ட் போட்டிகளையே அழித்துவிடும் என்று யுவராஜ் சிங் உள்பட முன்னாள் வீரர்கள் பலரே கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

அகமதாபாத் பிட்ச் குறித்து ஆளாளுக்கு ஒரு கருத்து தெரிவித்து வரும் நிலையில், இது குறித்து பேசியுள்ள முன்னாள் இங்கிலாந்து வீரர் மைக்கெல் வாகனோ, ஐசிசி.,யை கடுமையாக சாடி பேசியுள்ளார்.

இந்தியாவ கேள்வி கேக்க கொஞ்சம் கூட தைரியம் இல்லையா..? மைக்கெல் வாகன் கோபம் !! 3

இது குறித்து மைக்கெல் வாகன் பேசுகையில், “ஐசிசி அமைப்புக்கு இந்தியா போன்ற பலமான நாடுகளை கேள்வி கேட்க பல் இல்லாமல் இருக்கிறது. இந்தியா எப்படிப்பட்ட பிட்சையும் தயார் செய்யலாம் அது டெஸ்ட் கிரிக்கெட்டின் தரத்தை கெடுக்கிறது. ஆனால் இதனை யாரும் தட்டி கேட்க முடியாது”.

இந்தியாவ கேள்வி கேக்க கொஞ்சம் கூட தைரியம் இல்லையா..? மைக்கெல் வாகன் கோபம் !! 4

“போட்டியை நேரலையாக ஒளிபரப்பும் நிறுவனங்கள் பணத்தை திரும்ப கேட்கும். டெஸ்ட் போட்டிகள் முன் கூட்டிய முடிந்துவிடுகிறது. இந்தியா தனக்கு சாதகமான மிகவும் மோசமான பிட்சை தயாரிக்கிறது. இதனால் வீரர்களால் சரியாக விளையாடவில்லை என குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. இந்தியா போட்டியை நெருக்கத்திலேயே வென்று இருக்கிறது. என்னை பொறுத்தவரை இந்தப் போட்டியில் வெற்றியாளர் என யாரும் இல்லை” என்றார் வாகன்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *