பெரிய கிரவுண்டு தான்.. ஆனா எங்க அளவுக்கு இல்ல – கலாய்த்த முன்னாள் கேப்டன்! வச்சு செஞ்ச நெட்டிசன்கள்!

உலகின் மிகப்பெரிய மைதானமாக உருவெடுத்துவரும் குஜராத் கிரிக்கெட் மைதானம் குறித்து கிண்டலடிக்க முயற்சித்த முன்னாள் கேப்டனை கலாய்த்து தள்ளினர் நெட்டிசன்கள்.

குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் கட்டப்பட்டு முடிவும் தருவாயில் இருக்கும் உலகின் பிரமாண்டமான சர்தார் வல்லபாய் படேல் கிரிக்கெட் மைதானத்தின் கழுகுப் பார்வை படத்தை பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரை கிரிக்கெட் என்பது முக்கியமான விளையாட்டு. சிறுவர்கள் முதல் வயதானவர்கள் வரை வயது வித்தியாசமின்றி கிரிக்கெட்டுக்கு ரசிகர்கள் உண்டு.imageரசிகர்களின் ஆதரவே ஐபிஎல் போன்ற புதிய போட்டிகள் தொடங்கப்படவும், அது வெற்றி அடையவும் காரணம். நாளுக்கு நாள் கிரிக்கெட் தொடர்பான விஷயங்கள் அப்டேட் ஆகிக்கொண்டே இருக்கின்றன. இந்நிலையில் உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தை குஜராத் மாநிலம் கிரிக்கெட் சங்கம் உருவாக்கியுள்ளது.

image

குஜராத்தின் அகமதாபாத்தில் உருவாகி இருக்கும் சர்தார் வல்லபாய் படேல் கிரிக்கெட் மைதானம்தான் அது. இந்த மைதானம் ஒரு லட்சத்து பத்தாயிரம் பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய வகையில் உருவாகி இருக்கிறது. இந்த மைதானம். தற்போது ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ள மைதானமே உலகில் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாகும். இங்கு ஒரு லட்சத்து 24 பேர் அமர்ந்து விளையாட்டை கண்டுரசிக்கலாம். ஆஸ்திரேலியாவின் மைதானத்தை பின்னுக்குத் தள்ளும் விதமாக அகமதாபாத் மைதானம் உருவாகி வருகிறது.

இதன் தற்போதைய புகைப்படத்தை பிசிசிஐ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது. இதற்க்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்த போதிலும், இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன், “ஓரளவிற்கு எங்களது மைதானம் போல தான் இருக்கிறது” என கிண்டலான பாணியில் கூறினார்.

இதனால் கடுப்பான நெட்டிசன்கள் அவரை அதே இடத்தில் கமெண்ட்டுகளால் கலாய்த்து தள்ளினர்.

  • SHARE
 • விவரம் காண

  இரண்டு முக்கிய தலைகள் இல்லாத இந்தியா அணியை தேர்வு செய்த ஷேன் வார்னே! கேப்டன் யார் தெரியுமா?

  ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்னே தனக்கு மிகவும் பிடித்தமான இந்திய அணியை தேர்வு செய்துள்ளார். ஆனால் அந்த அணியில்...

  வீடியோ: தனிமைப்படுத்தலில் இருக்கும்போது குதிரை சவாரி செய்யும் ஜடேஜா!

  இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா குதிரை சவாரி செய்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். கொரோனா தாக்கம் காரணமாக சர்வதேச கிரிக்கெட்...

  இந்திய வீரர்களின் சம்பளம் பிடித்தம் செய்யப்படுமா..? புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது பி.சி.சி.ஐ !!

  இந்திய வீரர்களின் சம்பளம் பிடித்தம் செய்யப்படுமா..? புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது பி.சி.சி.ஐ கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கிரிக்கெட் போட்டி நடைபெறாமல் இருப்பதால் வீரர்களின்...

  எனக்கு தொல்லை கொடுத்த ஒரே ஒரு பந்துவீச்சாளர் இவர் தான்; யுவராஜ் சிங் ஓபன் டாக் !!

  எனக்கு தொல்லை கொடுத்த ஒரே ஒரு பந்துவீச்சாளர் இவர் தான்; யுவராஜ் சிங் ஓபன் டாக் தான் கிரிக்கெட் விளையாடி காலத்தில் தனக்கு சவாலாக...

  எல்லாரும் பணத்துக்காக தான் விளையாடுறாங்க; யுவராஜ் சிங் ஆதங்கம் !!

  எல்லாரும் பணத்துக்காக தான் விளையாடுறாங்க; யுவராஜ் சிங் ஆதங்கம் யுவராஜ் சிங் கிரிக்கெட்டை ஐபிஎல்-க்கு முன் ஐபிஎல்-க்குப் பிறகு என்று இரண்டாகப் பிரித்துப் பார்க்கிறார்....