கிரிக்கெட் அரங்கில் புதிய மைல்கல்லை எட்டினார் மிதாலி ராஜ் !! 1
கிரிக்கெட் அரங்கில் புதிய மைல்கல்லை எட்டினார் மிதாலி ராஜ்

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை மிதாலி ராஜ் சர்வதேச டி20 போட்டிகளில் 2000 ரன்களை கடந்த முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார்.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் வீராங்கனையான மிதாலி ராஜ், இந்திய டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகளின் கேப்டனாக இருந்து வருகிறார். இவர், அனைத்துக் காலத்திற்குமான சிறந்த மகளிர் பேட்ஸ்மேன்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார்.

கிரிக்கெட் அரங்கில் புதிய மைல்கல்லை எட்டினார் மிதாலி ராஜ் !! 2

ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த முதல் பெண் எனும் சாதனையைப் படைத்துள்ளார். இவர் ஒருநாள் போட்டிகளில் 6,000 ஓட்டங்கள் எடுத்த முதல் வீராங்கனை ஆவார். ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ச்சியாக ஏழு முறை அரைசதம் அடித்த முதல் வீராங்கனை ஆவார். மேலும் அதிகமுறை 50 ஓட்டங்கள் எடுத்த வீராங்கனை எனும் சாதனைகளைப் படைத்துள்ளார்.

இந்நிலையில், மிதாலி ராஜ் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். இன்று இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்ற மகளிர் ஆகிய கோப்பை லீக் போட்டியில் மிதாலி ராஜ் 23 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் 2 ஆயிரம் ரன்களை கடந்த முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை மிதாலி ராஜ் படைத்துள்ளார். இதுவரை 73 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 2 ஆயிரம் ரன்கள் எடுத்துள்ளார்.

கிரிக்கெட் அரங்கில் புதிய மைல்கல்லை எட்டினார் மிதாலி ராஜ் !! 3
Mithali Raj reached the landmark during India’s seven-wicket win over Sri Lanka in the ongoing Women’s Asia Cup T20 © Getty

இந்த பட்டியலில், சார்லட் எட்வர்ட்ஸ் (இங்கிலாந்து) 2,605 ரன்கள், ஸ்டெபானி டெய்லர் (வெஸ்ட்இண்டீஸ்) 2,582 ரன்கள் ஆகியோர் முதல் இரண்டு இடங்களில் உள்ளனர். இதுதவிர இன்னும் 5 வீராங்கனைகள் 2000 ரன்களை கடந்துள்ளனர். சர்வதேச அளவில் 2 ஆயிரம் ரன்களை கடந்த 7வது வீராங்கனை மிதாலி ராஜ் ஆவார்.

Leave a comment

Your email address will not be published.