14ஆவது ஐபிஎல் சீசன் வருகிற ஏப்ரல் 9ஆம் தேதி முதல் மே 30ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த ஐபிஎல் சீசன் தொடங்க இன்னும் இரண்டு நாட்களே இருப்பதால் அனைத்து அணிகளும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த சீசனில் 8 அணிகளும் புதிய வீரர்களை ஏலத்தில் எடுத்து பலமாக உள்ளது.

முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகிறது. இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் மும்பையில் மோதுகிறது. 

மொயின் அலி தொடர்பான மற்றொரு சர்ச்சை, இதற்கு இந்த பெண் தான் காரணம் ! யார் இவர் ? 2

இந்த சீசன் தொடங்குவதற்கு முன்பு பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. குறிப்பாக வீரர்கள் அனைவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் பிசிசிஐ கடுமையான பயோ பப்புள் விதிமுறைகளை விதித்து இருக்கிறது. மற்றொரு பக்கம் முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் அனைவரும் அனைத்து அணிகளுக்கும் உரிய ஆலோசனைகளை கூறி வருகின்றனர். 

இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஏலத்தின் மூலம் எடுக்கப்பட்ட மொயின் அலி சிஎஸ்கேவின் புதிய ஜெர்சியில் இருக்கும் மதுபான நிறுவனத்தின் லோகாவை எடுக்க வேண்டும் என்று கூறியதாக சர்ச்சை கிளம்பியது. ஆனால் சிஎஸ்கே நிர்வாகம் இதுபோன்று எந்தொரு சம்பவமும் நடக்கவில்லை என்று கூறியிருக்கின்றனர்.

மொயின் அலி தொடர்பான மற்றொரு சர்ச்சை, இதற்கு இந்த பெண் தான் காரணம் ! யார் இவர் ? 3

இதையடுத்து மொயின் அலி வைத்து தற்போது வங்கதேச பெண் எழுத்தாளர் மூலம் சர்ச்சை கிளம்பியுள்ளது. அது என்னவென்றால் வங்கதேச பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன் தனது ட்விட்டரில் மொயின் அலி மட்டுமே கிரிக்கெட் வீரராக ஆகாமல் இருந்திருந்தால் சிரியா சென்று ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இணைந்திருப்பார் என்று பதிவிட்டு இருக்கிறார். இதனால் கோபமடைந்த ரசிகர்கள் கம்மெண்ட்டில் பதிலடி கொடுத்தனர்.

மொயின் அலி தொடர்பான மற்றொரு சர்ச்சை, இதற்கு இந்த பெண் தான் காரணம் ! யார் இவர் ? 4

இதற்கு விளக்கமளிக்கும் வகையில் அந்த பெண் எழுத்தாளர் இன்னொரு ட்விட் செய்திருக்கிறார். அதில் “என்னை வெறுக்கும் அனைவருக்கும் எனது மொயின் அலி ட்விட் நகைச்சுவையானது என்று தெரியும். அவர்கள் முஸ்லீம் சமுதாயத்தை மதமயமாக்க முயற்சிக்கிறார்கள். இஸ்லாமிய வெறித்தனத்தை நான் எதிர்க்கிறேன்.

ஏனெனில் என்னை அவமானப்படுத்தும் ஒரு பிரச்சினையாக அவர்கள் செய்தார்கள். மனிதகுலத்தின் மிகப்பெரிய துயரங்களில் ஒன்று பெண்கள் சார்பு இடதுசாரிகள் பெண்கள் விரோத இஸ்லாமியவாதிகளை ஆதரிக்கின்றனர்” என்று ட்விட் செய்து இருக்கிறார்.

மொயின் அலி தொடர்பான மற்றொரு சர்ச்சை, இதற்கு இந்த பெண் தான் காரணம் ! யார் இவர் ? 5

இதற்கு மொயின் அலி நடவடிக்கை எடுக்கவில்லை என்றாலும் ஏசஸ் மத்திய கிழக்கு (Aces middle East) நிறுவனம் நடவடிக்கை எடுத்து இருக்கிறது. இதுகுறித்து அவர்கள் செய்து ட்விட் மூலம் அறிந்தது என்னவென்றால் “இந்த எழுத்தாளர் மீது அவதூறு வழக்க போட ஆலோசித்து வருவதாகவும், இதுபோன்று செயல்படுபவர்களை சும்மா விட கூடாது” என்று கூறியிருக்கின்றனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *