'அவங்கல எதும் பண்ணமாட்டோம்... கவலை படாதிங்க' ஆறுதல் தரும் மொயின் அலி 1

ஆஷஸ் தொடரின்போது ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் ஆகியோர் நல்லவிதமாக நடத்தப்படுவார்கள் என நம்புகிறேன் என்று மொயீன் அலி தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவின் சிறந்த வீரர் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர். இருவரும் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஓராண்டு தடைபெற்றனர். தற்போது தடை முடிந்துள்ளதால் உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்துள்ளனர்.

உலகக்கோப்பை தொடர் முடிந்த பின்னர் ஆகஸ்ட் 1-ந்தேதி ஆஷஸ் தொடர் நடக்கிறது. இங்கிலாந்து – ஆஸ்திரேலியா இடையிலான போட்டியின்போது வீரர்கள் ஸ்லெட்ஜிங்கில் அதிக அளவில் ஈடுபடுவார்கள். மேலும், இங்கிலாந்து ரசிகர்களும் கேலி கிண்டல் செய்வார்கள்.

ஆஷஸ் தொடரின்போது பால் டேம்பரிங் விவகாரத்தை வைத்து இருவரையும் இங்கிலாந்து ரசிகர்கள் கிண்டல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இருவரும் நல்ல விதமாக நடத்தப்படுவார்கள் என்று இங்கிலாந்தின் சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் மொயீன் அலி தெரிவித்துள்ளார்.'அவங்கல எதும் பண்ணமாட்டோம்... கவலை படாதிங்க' ஆறுதல் தரும் மொயின் அலி 2

இதுகுறித்து மொயீன் அலி கூறுகையில் ‘‘அவர்களை மிகுந்த அளிவில் தொந்தரவு செய்யமாட்டார்கள் என்று நான் நம்புகிறேன். அவர்கள் தொடரை சந்தோசமாக விளையாட வேண்டும். அப்படி ஏதாவது இருந்தால், அது வேடிக்கையாகத்தான் இருக்கும். நாம் எல்லோரும் தவறு செய்யக்கூடியவர்கள். நாம் மனிதர்கள். நமக்கு உணர்வுகள் இருக்கிறது.

அவர்கள் சிறந்த மக்கள் என்பது எனக்குத் தெரியும். அவர்கள் இருவரையும் நல்லவிதமாக நடத்துவார்கள் என்று நம்புகிறேன். கிரிக்கெட்டை பற்றி பேச வேண்டும் என்று நான் விரும்புகிறேன்’’ என்றார்.

50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் வருகிற 30-ந்தேதி தொடங்குகிறது. ஜூலை 14-ந்தேதி வரை நடக்கும் இந்தத் தொடரில் 10 அணிகள் பங்கேற்கின்றன.'அவங்கல எதும் பண்ணமாட்டோம்... கவலை படாதிங்க' ஆறுதல் தரும் மொயின் அலி 3

கடந்த மாதம் 20-ந்தேதிக்குள் முதற்கட்ட அணியை அறிவிக்க வேண்டும் என்று ஐசிசி கூறியிருந்தது. ஆனால் நாளைமறுநாள் (மார்ச் 23-ந்தேதி) வரை தேவைப்பட்டால் அணியில் உள்ள வீரர்களை மாற்றிக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

நேற்று பாகிஸ்தான் அணி மூன்று வீரர்களை மாற்றியிருந்தது. இங்கிலாந்து அணியின் முதற்கட்ட பட்டியலில் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான ஜாப்ரா ஆர்சர், லியாம் டாசன் ஆகியோருக்கு இடம் கிடைக்கவில்லை.

பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் ஆர்சர் இடம்பிடித்திருந்தார். இந்நிலையில் இன்று இங்கிலாந்து 15 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலை அறிவித்துள்ளது. இதில் ஆர்சர், டாசன் இடம்பிடித்துள்ளனர்.

'அவங்கல எதும் பண்ணமாட்டோம்... கவலை படாதிங்க' ஆறுதல் தரும் மொயின் அலி 4

15 பேர் கொண்ட இங்கிலாந்து அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

1. மோர்சன் (கேப்டன்), 2. மொயீன் அலி, 3. பேர்ஸ்டோவ், 4. ஜோஸ் பட்லர், 5. டாம் குர்ரான், 6. லியாம் டாசன், 7. லியாம் பிளங்கெட், 8. அடில் ரஷித், 9. ஜோ ரூட், 10. ஜேசன் ராய், 11. பென் ஸ்டோக்ஸ், 12. ஜேம்ஸ் வின்ஸ், 13. கிறிஸ் வோக்ஸ், 14. மார்க்வுட். 15. ஜாப்ரா ஆர்சர்.

முதற்கட்டமாக அறிவிக்கப்பட்ட இங்கிலாந்து அணியில் இடம்பிடித்திருந்த அலேக்ஸ் ஹேல்ஸ், ஜோ டென்லி ஆகியோர் தற்போது நீக்கப்பட்டுள்ளனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *