கோஹ்லி – பாபர் அசாம் இருவரில் யார் சிறந்த வீரர் ; முன்னாள் வீரர் அதிரடி கருத்து

விராட் கோஹ்லி – பாபர் அசாம் ஆகிய இருவரில் யார் சிறந்த வீரர் என்பது குறித்தான தனது கருத்தை இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது அசாருதீன் ஓபனாக தெரிவித்துள்ளார்.

நிகழ்கால கிரிக்கெட் உலகின் கிங்காக திகழும் விராட் கோஹ்லிக்கு உலகெங்கிலும் ரசிகர்கள் உண்டு. தான் விளையாடும் ஒவ்வொரு போட்டியிலும் பல சாதனைகளை குவித்து வரும் விராட் கோஹ்லி சமகால கிரிக்கெட் உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேனாக திகழ்ந்து வருகிறார்.

 

இந்தியாவின் விராட் கோஹ்லியை ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் பாராட்டி வருவதால், ஒவ்வொரு நாட்டு கிரிக்கெட் அணியும் தங்களது அணியில் இருக்கும் ஒரு சிறந்த வீரரை காட்டி இவர் தான் எங்கள் அணியின் விராட் கோஹ்லி என்று சொல்லும் அளவிற்கு விராட் கோஹ்லியின் புகழ் கிரிக்கெட் உலகில் ஓங்கியுள்ளது.

கோஹ்லி - பாபர் அசாம் இருவரில் யார் சிறந்த வீரர் ? முன்னாள் வீரர் அதிரடி கருத்து !! 2

அந்த வகையில் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரரான பாபர் அசாமை விராட் கோஹ்லியுடன் ஒப்பிட்டு முன்னாள், இந்நாள் வீரர்கள் என பலரும் தங்களது கருத்துகளை தொடர்ந்து கூறி வருகின்றனர். விராட் கோஹ்லியுடன் தன்னை ஒப்பிடாதீர்கள் என்று பாபர் அசாமே கூறினாலும் இல்லை இல்லை நீயும் விராட் கோஹ்லி போன்று பெரிய வீரர் தான் முன்னாள் வீரர்கள் பலர் அவரை தொடர்ந்து உசுப்பேற்றி வருகின்றனர்.

இந்தநிலையில் விராட் கோஹ்லி – பாபர் அசாம் ஆகிய இருவர் குறித்தான விவாதம் தொடர்ந்து தனது கருத்தை இந்திய அணியின் முன்னாள் வீரரும், முன்னாள் கேப்டனுமான முகமது அசாருதீன் ஓபனாக தெரிவித்துள்ளார்.

கோஹ்லி - பாபர் அசாம் இருவரில் யார் சிறந்த வீரர் ? முன்னாள் வீரர் அதிரடி கருத்து !! 3

இது குறித்து முகமது அசாருதீன் கூறியதாவது;

பாபர் அசாம் இளம் வீரர், அவருக்கு இன்னும் கிரிக்கெட்டில் எதிர்காலம் உள்ளது. பாகிஸ்தான் அணியின் சிறந்த வீரராகவும், உலகின் சிறந்த பேட்ஸ்மேனாகவும் திகழும் அளவிற்கு பாபர் அசாம் தனது ஆட்டத்தை சிறப்பாக விளையாடி வருகிறார். ஒப்பீடுகளில் எனக்கு விருப்பம் இல்லை, நம்பிக்கையும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *