கார் விபத்தில் சிக்கிய முகமது ஷமி… மருத்துவமனையில் தீவிர சிகிச்சை !! 1

கார் விபத்தில் சிக்கிய முகமது ஷமி… மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி, சென்ற கார் விபத்தில் சிக்கியதால் காயமடைந்துள்ள முகமது ஷமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி மீது அவரது மனைவி கடந்த சில தினங்களாக கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகிறார்.

ஷமிக்கு பல பெண்களுடன் தவறான தொடர்பு உள்ளது என்று அரம்பித்த ஷமியின் மனைவி ஹசீன் ஜஹான் ஷமியை தீவிரவாதிகள் வரை தொடர்ப்பு படுத்தி குற்றம் சாட்டினார்.

கார் விபத்தில் சிக்கிய முகமது ஷமி… மருத்துவமனையில் தீவிர சிகிச்சை !! 2
Indian cricketer Mohammed Shami leaves after batting in the nets during a training camp at National Cricket Academy in Bangalore, India, Friday, July 1, 2016. The Indian team is scheduled to travel to West Indies to play four match test series starting July 21. (AP Photo/Aijaz Rahi)

ஹசீன் ஜஹான் வைத்த பிரதானமான குற்றச்சாட்டுகளுள் ஷமி பாகிஸ்தானிடம் இருந்து பணம் பெற்றுக்கொண்டு கிரிக்கெட் சூதாட்டத்திலும் ஈடுபட்டார் என்பது ஆகும். இது குறித்து பி.சி.சி.ஐ.,யும் ஊழல் தடுப்பு போலீஸாரும் நடத்திய விசாரணையின் முடிவில் ஷமி மீது எந்த தவறும் இல்லை என்பது தெரியவந்தது. இதன் பிறகு ஷமியை இந்திய கிரிக்கெட் வீரர்களின் ஒப்பந்த பட்டியலில் இணைத்தது.

இந்த பிரச்சனையில் இருந்து ஷமி விடுபட்டு இரண்டு தினங்கள் கூட ஆகாத நிலையில், நேற்று இரவு ஷமி சென்ற  கார் விபத்தில் சிக்கியுள்ளது.

டேராடுனில் இருந்து இன்று டெல்லி திரும்பியபோது அவரது கார் ஒரு டிரக்கில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஷமி தலையில் பலத்த காயமடைந்தார்.

இதற்காக டோராடூனில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டுள்ள முகமது ஷமிக்கு, தலையில் சில தையல்கள் போடப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிகின்றன.

இது விபத்து அல்ல, ஷமியை கொலை செய்வதற்கான முயற்சி என்றும் சில தகவல்கள் தெரிவிப்பதால்  டோராடூன் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *