முகமது ஷமிக்கு இனி அணியில் இடம் இல்லை... முக்கிய முடிவை எடுத்த பிசிசிஐ !! 1

டி20 உலகக் கோப்பை தொடரும்கான திட்டத்தில் சமி இல்லவே இல்லை என்று பிசிசிஐ நிர்வாகி வெளிப்படையாக பேசியுள்ளார்.

தற்போதைய இந்திய அணியின் மூன்று விதமான தொடரிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் திறமை படைத்த உலகத்தரம் வாய்ந்த வேகப்பந்துவீச்சாளர் முகமது சமி,2018ஆம் ஆண்டு நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் மோசமான பந்துவீச்சை வெளிப்படுத்தி பெரும்பாலானவர்களின் விமர்சனத்திற்கு உள்ளானார்.முகமது ஷமிக்கு இனி அணியில் இடம் இல்லை... முக்கிய முடிவை எடுத்த பிசிசிஐ !! 2

மேலும் அதனை தொடர்ந்து நடைபெற்ற உலகக் கோப்பை தொடரிலும் இவருடைய பந்திவீச்சு சொல்லிக் கொள்ளும் அளவிற்கு சிறப்பாக இல்லை. பின் தன்னுடைய கடின முயற்சியால் 2021 முதல் மீண்டும் தன்னுடைய சிறப்பான பந்துவீச்சை முகமது சமி வெளிப்படுத்த துவங்கியுள்ளார்.

 

தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் எதிரணி பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தும் வகையில் பந்துவீசி வரும் முகமது சமி தன்னுடைய மோசமான பார்மில் இருந்து மீண்டுள்ளார்.இருந்தபோதும் இவரை டி20 உலகக் கோப்பையில் தேர்ந்தெடுக்க போவதில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

முகமது ஷமிக்கு இனி அணியில் இடம் இல்லை... முக்கிய முடிவை எடுத்த பிசிசிஐ !! 3

இந்திய அணியின் டெஸ்ட் தொடரில் மட்டுமே அதிகம் பயன்படுத்தபட்ட முகமது சமி ஐபிஎல் தொடரிலும் அதனை தொடர்ந்து நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரிலும் லிமிடெட் ஓவர் போட்டிகளில் தன்னால் சிறப்பாக செயல்பட முடியும் என்பதை நிரூபித்துக் காட்டினார்.

இதனால் இவருக்கு எதிர்வரும் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியில் விளையாடுவதற்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால் பிசிசிஐ முகமது சமியை டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாட வைப்பதற்கான திட்டம் எதுவும் இல்லை என்று வெளிப்படையாகவே தெரிவித்து விட்டது.முகமது ஷமிக்கு இனி அணியில் இடம் இல்லை... முக்கிய முடிவை எடுத்த பிசிசிஐ !! 4

இதுகுறித்து பிசிசிஐ நிர்வாகி தெரிவித்ததாவது, “சமி இனிமேல் இளமையாக மாறப் போவது கிடையாது, அவரை நாங்கள் டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக புத்துணர்வாக வைத்துள்ளோம். அதனால்தான் அவரை டி20 போட்டிகளில் விளையாட வைக்கவில்லை. உலகக்கோப்பை தொடர்க்கு முன், வேலை பளு நிர்வாகிகளிடம் பேசினோம்., அவர்களும் இதே கருத்தை தான் தெரிவித்துள்ளார்கள். இதனால் சமி டி20 உலக கோப்பை தொடருக்கான திட்டத்தில் இடம் பெறவில்லை. இந்த தொடரில் இளைஞர்கள் மீது அதிக கவனம் செலுத்தவுள்ளம் என்று அந்த நிர்வாகி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *