தோனியின் சாதனையை முறியத்தார் சகா!! 1

இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி இரண்டாவது இன்னிங்சில் 130 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி கேப் டவுனில் ஜனவரி 5-ம் தேதி தொடங்கியது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்து, 286 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. புவனேஷ்வர்குமார் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் விளையாடிய இந்திய அணி 209 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஹர்திக் பாண்ட்யா மட்டும் தனி ஆளாக போராடி 93 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர்.தோனியின் சாதனையை முறியத்தார் சகா!! 2

இதனையடுத்து 77 ரன்கள் முன்னிலையுடன் தென்னாப்பிரிக்கா தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் அந்த அணி 65 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. 3-வது நாளான நேற்று முற்றிலும் மழையால் தடைபட்டது. இந்நிலையில் 4-வது நாளான இன்று தென்னாப்பிரிக்கா அணி தொடர்ந்து விளையாடியது.

மேற்கொண்டு ஒரு ரன் எடுப்பதற்குள் ஆம்லா 4 ரன்னில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து, ரபாடா 5 ரன்னில் நடையைக் கட்டினார். இந்த இரண்டு விக்கெட்டுகளையும் முகமது சமி கைப்பற்றினார். பின்னர், டிவில்லியர்ஸ் மட்டும் நிலைத்து நின்று ஆட மற்றவர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்த வண்ணம் இருந்தனர். இறுதியில் தென்னாப்பிரிக்கா அணி 130 ரன்னில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. டிவில்லியர்ஸ் 35 ரன்கள் எடுத்து கடைசியாக ஆட்டமிழந்தார். முகமது சமி, பும்ரா தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர். பாண்டியா, புவனேஷ்வர் குமார் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.தோனியின் சாதனையை முறியத்தார் சகா!! 3

65 ரன்களுக்கு 2 விக்கெட்டுகள் என்ற நிலையில் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா, மேற்கொண்டு 65 ரன்கள் சேர்ப்பதற்குள் மீதமுள்ள 8 விக்கெட்டுகளை இழந்தது. தென்னாப்பிரிக்கா அணி 207 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இதனால், இந்திய அணிக்கு 208 ரன்கள் இலக்காக நிர்ணையிக்கப்பட்டுள்ளது.

இந்த டெஸ்ட் போட்டியில் மட்டும் விக்கெட் கீப்பர் விருதிமான் சகா பிடித்த கேட்சுகள் மொத்தம் 10 ஆகும். இதனால் இதற்கு முன்னர் இந்திய விக்கெட் கீப்பர்களால் அதிகம் பிடிக்கப்பட்ட கேட்சுகளின் எண்ணிக்கையை தாண்டி சாதனை படைத்தார் வ்ரித்திமான் சகா.தோனியின் சாதனையை முறியத்தார் சகா!! 4

இதற்கு முன்னர், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி 8 கேட்ச்கள் பிடித்ததே சாதனையாக இருந்தது. அந்த சாதனையை தற்போது விருதிமான் சகா தகர்த்துள்ளார்.

இந்திய கீப்பர்கள் அதிகம் பிடித்த கேட்ச் பட்டியல் :

1.விருத்திமான் சகா – 10 கேட்ச், இந்தியா – தென்னாப்பிரிக்கா, 2018
2.தோனி – 8 கேட்ச், இந்தியா – ஆஸ்திரேலியா, 2014
3.நயன் மோங்கியா – 8 கேட்ச், இந்தியா- தென்னாப்பிரிக்கா, 1996
4.நயன் மோங்கியா – 8 கேட்ச், இந்தியா-பாகிஸ்தான்,1999
5.தோனி – 7 கேட்ச், இந்தியா-ஆஸ்திரேலியா, 2008
6.தோனி – 7 கேட்ச், இந்தியா -ஆஸ்திரேலியா, 2009

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *