Cricket, Virat Kohli, Delhi, Gautam Gambhir, Ranji Trophy

தற்போது இலங்கை அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் கை ஓங்கி இருந்தது, ஆனால் போராடி சமனில் முடித்தது இலங்கை அணி. இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி நாக்பூர் மைதானத்தில் இந்தியா- இலங்கை அணிகள் விளையாடி வருகின்றன.

இந்த டெஸ்ட் போட்டியின் போது இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி சதம் அடித்து அசத்த, முன்னாள் நட்சத்திர கேப்டன்களான ரிக்கி பாண்டிங், க்ரேம் ஸ்மித் ஆகியோரின் சர்வதேச சாதனைகளை அசால்ட்டாக பறித்தார் கேப்டன் கோலி.

இந்த டெஸ்டில் இலங்கை டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. அஸ்வின் (4), இசாந்த் சர்மா (3), ஜடேஜா ஆகியோரின் சிறப்பான பந்து வீச்சால் இலங்கை முதல் இன்னிங்சில் 205 ரன்னில் சுருண்டது.

பின்னர் இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. முரளி விஜய், லோகேஷ் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். லோகேஷ் ராகுல் 7 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.

சர்வதேச கிரிக்கெட்டில் இன்னொரு சாதனையை படைத்தார் விராட் கோலி 1

முரளி விஜய் 112 பந்தில் 6 பவுண்டரியுடனும், புஜாரா 145 பந்தில் 7 பவுண்டரியுடனும் அரைசதம் அடித்தனர். அரைசதம் அடித்த பின்னர் முரளி விஜய் அதிரடியாக விளையாடினார். அவர் 187 பந்தில் 9 பவுண்டரி, 1 சிக்சருடன் சதம் அடித்தார். 2-வது அரைசதம் அடிக்க 75 பந்துகளே எடுத்துக் கொண்டார்.

சதம் அடித்த பிறகு முரளி விஜய் அவுட் ஆக, புஜாராவுடன் ஜோடி சேர்ந்தார் கேப்டன் கோலி. இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் புஜாரா சதம் அடிக்க, கோலி சதம் அடித்து களத்தில் இருந்தார்கள். மூன்றாவது நாள் தொடக்கத்தில் தனது 19வது டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்து அசத்தினார் கேப்டன் விராட் கோலி.

புதிய உலகசாதனை படைத்த கோலி :

Cricket, India, Sri Lanka, Virat Kohli, Records

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் 1999, 2003, 2007 என தொடர்ந்து மூன்று உலககோப்பைகளை வென்று ஆஸ்திரேலிய அணிக்கு கொடுத்துள்ளார். சிறந்த கேப்டனாக மட்டும் இல்லாமல் நட்சத்திர பேட்ஸ்மேனாகவும் திகழ்ந்தார். 2005 மற்றும் 2006ஆம் ஆண்டில் சர்வதேச போட்டிகளில் கேப்டனாக இருந்து 9 சதம் அடித்திருக்கிறார்.

தென்னாபிரிக்கா அணி கண்ட சிறந்த கேப்டன்களில் க்ரேம் ஸ்மித்தும் ஒருவர். கேப்டன் மற்றும் தொடக்கவீரராக விளையாடிய அவர் அவரது அணிக்காக பல போட்டிகளில் வென்று தந்துள்ளார். 2005ஆம் ஆண்டில் சர்வதேச போட்டிகளில் கேப்டனாக இருந்து 9 சதங்களை அடித்திருக்கிறார் ஸ்மித்.

Virat Kohli, India, Cricket, Sri Lanka, Ricky Ponting

2017ஆம் ஆண்டு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி சர்வதேச போட்டிகளில் கேப்டனாக இருந்து 10 சதம் அடித்திருக்கிறார். இந்நிலையில், ஒரே வருடத்தில் அதிக சர்வதேச சதம் அடித்த கேப்டன்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்தார் விராட் கோலி.

ஒரே வருடத்தில் அதிக சர்வதேச சதம் அடித்த கேப்டன்கள் பட்டியல்:

1. விராட் கோலி – 10 (2017)
2. ரிக்கி பாண்டிங் – 9 (2005)
3. க்ரேம் ஸ்மித் – 9 (2005)
4. ரிக்கி பாண்டிங் – 9 (2006)

Silambarasan Kv

Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

Leave a comment

Your email address will not be published.