புதிய சரித்திரம் படைத்த தல தோனி !! 1

புதிய சரித்திரம் படைத்த தல தோனி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலிரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்றதால் 1-1 என தொடர் சமனானது. இந்நிலையில் தொடரை தீர்மானிக்கும் கடைசி ஒருநாள் போட்டி மெல்போர்னில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி 230 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

231 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிவரும் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா 9 ரன்களிலும் தவன் 23 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதையடுத்து கோலியும் தோனியும் ஜோடி சேர்ந்து நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தனர். நிதானமாக ஆடிய கோலி, 46 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதத்தை தவறவிட்டார்.

புதிய சரித்திரம் படைத்த தல தோனி !! 2

கோலியின் விக்கெட்டுக்கு பிறகு தோனியுடன் கேதர் ஜாதவ் ஜோடி சேர்ந்தார். தொடர்ந்து நிதானத்தை கடைபிடித்த தோனி, இந்த தொடரில் தொடர்ந்து மூன்றாவது அரைசதத்தை அடித்தார். ஹாட்ரிக் அரைசதம் அடித்த தோனி, தொடர்ந்து நிதானத்தை கடைபிடித்து ஆடினார். தோனிக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஆடிய கேதர் ஜாதவும் அரைசதம் அடித்தார்.

கடைசிவரை அவசரப்படாமல் இருவரும் நிதானமாகவும் தெளிவாகவும் ஆடி, கடைசி ஓவரில் இலக்கை எட்டினர். 113 ரன்களில் 3வது விக்கெட்டாக கோலியின் விக்கெட்டை இழந்த இந்திய அணி, அதன்பிறகு விக்கெட்டை இழக்கவில்லை. 4வது விக்கெட்டுக்கு தோனியுடன் ஜோடி சேர்ந்த கேதர் ஜாதவ் சிறப்பாக ஆட, 50வது ஓவரில் இலக்கை எட்டி இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

புதிய சரித்திரம் படைத்த தல தோனி !! 3

கடைசி வரை ஆட்டமிழக்காமல் தோனி 87 ரன்களையும் கேதர் ஜாதவ் 61 ரன்களையும் குவித்திருந்தனர். இந்த போட்டியில் வென்றதன்மூலம் 2-1 என ஒருநாள் தொடரை வென்றது இந்திய அணி.

இந்த தொடரின் மூன்று போட்டிகளிலும் அரைசதம் அடித்ததன் மூலம் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்ட தோனி, இந்த தொடர் நாயகன் விருது மூலம் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிக முறை தொடர் நாயகன் விருது வென்ற இந்திய வீரர்கள் பட்டியலில் சச்சின் , கோஹ்லிக்கு அடுத்தப்படியாக இணைந்துள்ளார்.

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிக முறை தொடர் நாயகன் விருது வென்ற வீரர்கள் பட்டியல்;

சச்சின் டெண்டுல்கர் – 15 முறை

விராட் கோஹ்லி – 7 முறை

யுவராஜ் சிங் – 7 முறை

சவுரவ் கங்குலி – 7 முறை

எம்.எஸ் தோனி – 7 முறை

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *