Cricket, India, Sri Lanka, Virat Kohli, Ravindra Jadeja, Cheteshwar Pujara, Ajinkya Rahane

இந்திய கேப்டன் விராட் கோலி இந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியை வென்றதன் மூலம் வெளி நாட்டு மண்ணில் அதிக வெற்றிகள் பெற்ற இந்திய கேப்டன்கள் வரிசையில் இரண்டாவது இடம் பெற்று சாதனி படத்துள்ளார். ராகுல் ட்ராவிட் , தோனி ஆகியோரை முந்தி இரண்டாம் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் பல்வேறு தரப்பினரும் விராட் கோலியை பாராட்டி புகழ்ந்து வருகின்றனர்.

அந்த சாதனை பட்டியல் கீழே :

                           கேப்டன்        

                          சவ்ரவ் கங்குலி 

                          விராட் கோலி *

                         எம் எஸ் தோனி 

                          ராகுல் ட்ராவிட்

வெற்றிகள்

11 

7* 

6

5

இந்திய கேப்டன் விராட் கோலி இந்த தொடரை வென்றதன் மூலம் முன்னால் கேப்டன் முகமது அசாருதினின் சாதனையை தகர்த்துள்ளார். விராட் கோலி கேப்டன் பொருப்பேற்றதிலிருந்து அவர் வெற்றி பெரும் 8 வது தொடர் ஆகும். முன்னால் கேப்டன் முகமது அசாருதின் மொத்தம் 7 தொடர்களையே தனது கேப்டன்ஷிப்பில் வென்று இருந்தார் . இதன் மூலம் விராட் கோலி அசாருதினை முந்தி மூன்றாவது இடத்தில் உள்ளார் .

வெளிநாட்டு மண்ணில் அதிக வெற்றி : விராட் சாதனை 1

இந்த இலங்கை தொடர் வெற்றி மூலம் விராட் கோலி அசாருதினை முந்தி  சவுரவ் கங்குலிக்கு (10 தொடர்) பக்கம் வந்துள்ளார்.கடந்த 2014 ல் ஆஸ்திரேலியாவிற்க்கு எதிரான தொடரில் மகேந்தர சிங் தோனி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு  பெற்றதை தொடர்ந்து கேப்டன் பொருப்பு விராட் கோலியின் கைக்கு மாறியது.

இந்த மூன்று வருட இடைவெளியிளேயே அடுதடுத்து 8 டெஸ்ட் தொடர்களை வென்று சாதனை பட்டியலில்  இடம் பெற்று விட்டார் .

மேலும் ஒரு சாதனையாக  இலங்கை மண்ணில் இரண்டு டெஸ்ட் தொடர்களை வென்ற முதல் இந்திய கேப்டன் விராட் கோலி என்ற பெயரையும் பெற்றுள்ளார்.  இந்திய அணி 22 வருடங்களுக்கு பிறகு இலங்கை மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்வதும் குறிப்பிட தக்கது

வெளிநாட்டு மண்ணில் அதிக வெற்றி : விராட் சாதனை 2
India’s captain Virat Kohli speake during a press conference following a training session ahead of the fifth cricket Test match between India and England at the M.A. Chidhambaram stadium in Chennai on December 15, 2016. —-IMAGE RESTRICTED TO EDITORIAL USE – STRICTLY NO COMMERCIAL USE—– / AFP PHOTO / ARUN SANKAR / —-IMAGE RESTRICTED TO EDITORIAL USE – STRICTLY NO COMMERCIAL USE—– / GETTYOUT

கேப்டன்ஷிப் பொறுப்பு தன் கைக்கு  வந்ததிலிருந்து சாதனைகளில் தவழ்கிறார்  விராட் கோலி . ஆசிய மண்ணில்  அனைத்து சாதனைகளை படைத்து இருந்தாலும் அவருக்கு அக்னி பரிட்சை வெளிநாட்டு சுற்று பயணங்களில்தான் ஆரம்பமாகும் .

இந்திய அணி இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ,தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து போன்ற வெளிநாடுகளில் சுற்றுபயணம் செய்யும் போது தான் விராட் கோலியின் முழு கேப்டன்ஷிப் திறமை  பரிசோதிக்கபடும் .

இந்திய அணி இதற்க்கு முன்னர் இந்நாடுகளுக்கு சுற்றுபயணம் செய்த போது டெஸ்ட் தொடர்களை இழந்ததும் குறிப்பிடத்தக்கது. இது விராட் கோலிக்கு சவாலாக அமையும் ஏனெனில் அந்நாட்டு ஆடுகங்களில் கோலியே கூட  நன்றாக பேட்டிங் செய்ய திணரலாம்.

Leave a comment

Your email address will not be published.