இணையத்தில் அதிகம் தேடப்பட்ட கிரிக்கெட் பிரபலம்; கோஹ்லி, ரோஹித், தோனி இதில் யார் டாப்? 1

இணையத்தில் அதிகம் தேடப்பட்ட கிரிக்கெட் பிரபலம்; கோஹ்லி, ரோஹித், தோனி இதில் யார் டாப்?

இணையத்தில் அதிகம் தேடப்பட்ட கிரிக்கெட் பிரபலங்களின் பட்டியலை தனியார் நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் இந்திய வீரர்கள் முதல் மூன்று இடங்களைப் பிடித்திருக்கின்றனர்.

தற்போதைய இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேனாக இருக்கக்கூடியவர்கள் விராட் கோலி ரோகித் சர்மாவும் ஆகும். இந்திய அணியில் மட்டுமல்லாது ஐபிஎல் தொடர்களில் இவர்கள் இருவரின் ஆதிக்கமும் தொடர்ந்து இருந்து கொண்டே வருகிறது.

இணையத்தில் அதிகம் தேடப்பட்ட கிரிக்கெட் பிரபலம்; கோஹ்லி, ரோஹித், தோனி இதில் யார் டாப்? 2
MANCHESTER, ENGLAND – JUNE 16: India captain Virat Kohli high fives team mate Rohit Sharma as Sharma takes a single to reach his century during the Group Stage match of the ICC Cricket World Cup 2019 between Pakistan and India at Old Trafford on June 16, 2019 in Manchester, England. (Photo by Visionhaus/Getty Images)

இவர்களுக்கு மத்தியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியும் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார். கடந்த உலக கோப்பை அரையிறுதிப் போட்டிக்கு பிறகு இந்திய அணியில் அவர் ஆடவில்லை என்றாலும் அவரை பற்றிய செய்திகள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து வெளிவந்தவண்ணம் இருக்கின்றன.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவரின் ஆட்டத்தை ஐபிஎல் தொடர்களில் ரசிகர்கள் பார்ப்பதற்கு மிகவும் ஆவலாக இருந்தனர். ஆனால் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஐபிஎல் தொடர் தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது. இந்நிலையில் வருகிற செப்டம்பர் மாதம் 19ஆம் தேதி ஐபிஎல் தொடர் துவங்க இருப்பதால் நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவரை ரசிகர்கள் காண்பதற்கு ஆவலாக இருக்கின்றனர்.

இணையத்தில் அதிகம் தேடப்பட்ட கிரிக்கெட் பிரபலம்; கோஹ்லி, ரோஹித், தோனி இதில் யார் டாப்? 3

இதற்கிடையில் இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட கிரிக்கெட் பிரபலங்களின் பட்டியலை தனியார் நிறுவனம் ஒன்று வெளியிட்டது. அதில் அந்த பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி முதல் இடத்தில் இருக்கிறார். அவருக்கு அடுத்தபடியாக இந்திய அணியின் லிமிடட் ஓவர்ஸ் துணை கேப்டன் ரோகித் சர்மா இருக்கிறார். முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி மூன்றாமிடத்தில் இருக்கிறார்.

விராட் கோலியை கடந்த ஜனவரி மாதத்திலிருந்து ஜூலை மாதம் வரை இணையதளத்தில் சுமார் 16 லட்சத்து 20 ஆயிரம் முறை தேடப்பட்டிருக்கிறார். ரோகித் சர்மா 9.7 லட்சம் முறையும், முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனி 9.4 லட்சம் முறையும் தேடப்பட்டிருக்கிறார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *