Cricket, India, Sri Lanka, Virat kohli, Ricky Ponting, Don Bradman

இந்தியா – இலங்கை இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நேற்று, தொடங்கியது. டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 371 ரன்கள் எடுத்திருந்தது. விராட் கோலி 156 ரன்னுடனும், ரோகித் சர்மா 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடர்ந்த நிலையில், விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா பொறுமையாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இந்த ஜோடியை பிரிக்க இலங்கை பந்துவீச்சாளர்கள் எடுத்த முயற்சி எடுபடவில்லை. ஆட்டத்தின் 108 வது ஓவரில் விராட் கோலி 238 பந்துகளில் இரட்டை சதம் அடித்தார்.

238 பந்துகள் மட்டுமே சந்தித்து அவர் இரட்டை சதம் விளாசியது மிகவும் சிறப்புக்குறியதாகும். இதுவரை அவர் 6 முறை இரட்டை சதங்கள் அடித்து இருக்கிறார். இந்த ஆண்டில் இது அவரது மூன்றாவது இரட்டை சதமாகும்.

ஒரே வருடத்தில் அதிக டெஸ்ட் இரட்டை சதம் அடித்தவர்கள் 1
Virat Kohli captain of India celebrates his Two Hundred runs during day two of the 3rd test match between India and Sri Lanka held at the Feroz Shah Kotla Stadium in Delhi on the 3rd December 2017 Photo by Deepak Malik / BCCI / Sportzpics

2016ஆம் ஆண்டு வரை ஒரே இரட்டை சதம் கூட அடிக்காத விராட் கோலி, 2016ஆம் ஆண்டில் மூன்று இரட்டை சதம் மற்றும் 2017ஆம் ஆண்டில் மூன்று இரட்டை சதம் அடித்து அசத்திவிட்டார்.

இந்நிலையில், ஒரே ஆண்டில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக இரட்டை சதம் அடித்தவர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். இந்த பட்டியலில் முதல் இடத்தில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைகேல் கிளார்க் முதல் இடத்தில் இருக்கிறார்.

ஒரே வருடத்தில் அதிக டெஸ்ட் இரட்டை சதம் அடித்தவர்கள் 2
Virat Kohli captain of India raises his bat after scoring 100runs during day one of the 3rd test match between India and Sri Lanka held at the Feroz Shah Kotla Stadium in Delhi on the 2nd December 2017 Photo by Deepak Malik / BCCI / Sportzpics

2012ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மைகேல் கிளார்க் நான்கு இரட்டை சதம் அடித்து அசத்தினார். அந்த நான்கு இரட்டை சதமுமே அவர் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக இருக்கும் போது அடித்தார். 2012ஆம் ஆண்டில் இந்தியாவிற்கு எதிராக இரண்டு இரட்டை சதம் மற்றும் தென்னாபிரிக்கா அணிக்கு எதிராக இரண்டு இரட்டை சதம் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரே வருடத்தில் அதிக டெஸ்ட் இரட்டை சதம் அடித்தவர்கள் 3

அந்த பட்டியலில் அதற்கு அடுத்த இரண்டு இடங்களை விராட் கோலி ஆக்ரமித்துள்ளார். 2016ஆம் ஆண்டில் மூன்று இரட்டை சதம் மற்றும் 2017ஆம் ஆண்டு மூன்று இரட்டை சதம் அடித்திருக்கிறார்.

ricky-ponting-feels-alistair-cook-will-englands-main-batsman-upcoming-ashes/

விராட் கோலிக்கு அடுத்து ப்ராட்மான் – 3 இரட்டை சதம் (1930), பிரண்டன் மெக்கல்லம் – 3 (2014) மற்றும் ரிக்கி பாண்டிங் – 3 (2003) ஆம் ஆண்டில் அடித்து விராட் கோலிக்கு அடுத்தபடியாக உள்ளார்கள்.

Silambarasan Kv

Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

Leave a comment

Your email address will not be published.