புதிய மைல்கல்லை எட்டிய தல தோனி

ஆஸ்திரேலிய அணியுடனான முதல் ஒருநாள் போட்டியின் மூலம் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மழை காரணமாக, 1-1 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்தது. அடுத்த நடந்த 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றியது. 71 ஆண்டுக்குப் பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று இந்திய அணி சாதனை படைத்துள்ளது. இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இரு அணிகளும் பங்கேற்கின்றன. முதலாவது ஒரு நாள் போட்டி சிட்னியில் இன்று நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு அதிகபட்சமாக                                               ஹேண்ட்ஸ்கோம்ப் 73 ரன்களும், உஸ்மான் கவாஜா 59 ரன்களும், ஷேன் மார்ஸ் 54 ரன்களும், மார்கஸ் ஸ்டோனிஸ் 47* ரன்களும் எடுத்து கைகொடுத்ததன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலிய அணி 288 ரன்கள் எடுத்தது.

இந்திய அணி தரப்பில், புவனேஷ்வர்குமார், குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டும் ஜடேஜா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

இதனையடுத்து 289 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சற்று கடின இலக்கை துரத்தி களமிறங்கிய இந்திய அணி, வெறும் 7 ரன்கள் எடுத்தப்பதற்கு முன்பாகவே முதல் மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

பின்னர் நான்காவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ரோஹித் சர்மா – தோனி கூட்டணி போட்டியின் தன்மையை உணர்ந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இதில் முன்னாள் கேப்டனான தோனி 1 ரன்கள் எடுத்ததன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் தனது 10,000 ரன்களை பூர்த்தி செய்தார்.

இதன் மூலம், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் இந்திய அணிக்காக 10,000 ரன்களை கடந்த ஐந்தாவது வீரர் என்ற பெருமையையும் தோனி பெற்றுள்ளார். தோனி 330 இன்னிங்ஸில் 10,000 ரன்களை கடந்துள்ளார். இதில் 9 சதமும், 67 அரைசதமும் அடங்கும்.

இதற்கு முன்னதாக சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி, ராகுல் டிராவிட் மற்றும் விராட் கோஹ்லி ஆகியோர் ஒருநாள் போட்டிகளில் 10,000 ரன்களை கடந்திருந்தனர், தற்பொழுது அந்த வரிசையில் தோனியும் ஐந்தாவது வீரராக இணைந்துள்ளார். • SHARE

  விவரம் காண

  ஹர்திக் பாண்டியா மீண்டும் அணியில் இடம்பிடிக்க வேண்டும்; அஜித் அகார்கர் விருப்பம் !!

  ஹர்திக் பாண்டியா மீண்டும் அணியில் இடம்பிடிக்க வேண்டும்; அஜித் அகார்கர் விருப்பம் ஹர்திக் பாண்டியா விரைவில் அணிக்கு திரும்ப வேண்டுமென இந்திய அணியின் முன்னாள்...

  விராட் கோஹ்லியின் சாதனையை காலி செய்த ஹசீம் ஆம்லா !!

  விராட் கோஹ்லியின் சாதனையை காலி செய்த ஹசீம் ஆம்லா சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் அதிவேகமாக 27 சதங்கள் கடந்த வீரர்கள் பட்டியலில் விராட்...

  இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் உலகக்கோப்பை வெல்ல வாய்ப்புகள் அதிகம்: ரவி சாஸ்திரி

  இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் உலகக்கோப்பை வெல்ல வாய்ப்புகள் அதிகம் என இந்திய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார். இங்கிலாந்தில் இருந்து வெளியாகும் ‘டெய்லி...

  தோனியை புகழ்ந்து தள்ளிய மைக்கெல் கிளார்க் !!

  தோனியை புகழ்ந்து தள்ளிய மைக்கெல் கிளார்க் தனக்கு பாண்டிங் எப்படியோ அப்படித்தான் இந்திய அணியின் கேப்டன் கோலிக்கு தோனியின் ஆலோசனை தேவை என்று ஆஸ்திரேலிய...

  பந்தை நீங்களே வாங்கிக்கங்க; மைதானத்தில் தோனி கல கல !!

  பந்தை நீங்களே வாங்கிக்கங்க; மைதானத்தில் தோனி கல கல மெல்போர்னில் நடந்த கடைசி ஒருநாள் போட்டியில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்று இந்திய...