சாதனை

சாதனை தோனி

நேற்று நடந்த இந்தியா இலங்கை இடயேயான் 3ஆவது ஒரு நாள் போட்டியில் இந்திய வெற்றி பெற்றது. அதனுடன் சேர்த்து தோனியும் ஒரு சாதனை படைத்துள்ளார். ஒரு நாள் போட்டிகளில் இந்தியாவின் அதிக ரன் அடித்தவர்கள் பட்டியளில் தற்போது 4ஆவது இடத்தை பிடித்துள்ளார். சச்சின், கங்குலி, ட்ராவிட் ஆகியோருக்குப் பின் தற்போது தோனி தான் அதிக ரன் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று, 9375 ரன்னை கடந்த போது இந்த சாதனையை படைத்தார் தோனி.

சாதனை

முன்னர் மூன்றாவது இடத்தில் முன்னாள் கேப்டன் அசாருதின் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

1. சச்சின் டெண்டுல்கர் – 18426 ரன்

2. சௌரவ் கங்குலி – 11221

3. ராகுல் ட்ராவிட் – 10768

4 . எம்.எஸ். தோனி – 9608 *

இந்தியா இலங்கை இடயேயான மூன்றாவது ஒரு நாள் போட்டி நேற்று பல்லகெலேவில் நடந்தது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 217 ரன் அடித்தது. பின்னர் எளிதான இலக்கை நோக்கி களம் இறங்கிய இந்திய அணி தொடக்கத்தில் சற்று பின்வாங்கியது. 64 ரன்னுக்கு 4 விக்கெட் என்ற னிலையில் இருந்து ரோகித் சர்மா மற்றும் தோனி ஆகியோரின் அபார ஆட்டத்தால் 45.1 ஓவர்களில் 218 ரன் அடித்து இந்தியா வெற்றி தொடரை வென்றது.
சாதனை படைத்தார் தோனி 1
Indian cricketer Rohit Sharma plays a shot during the 3rd One Day International cricket match between Sri Lanka and India at the Pallekele international cricket stadium at Kandy, Sri Lanka on Sunday 27 August 2017.
(Photo by Tharaka Basnayaka/NurPhoto via Getty Images)

ரோஹித் சர்மாவின் சிறப்பான ஆட்டத்தால் இலங்கைக்கு எதிரான 3-வது ஒரு நாள் போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது இந்திய அணி.

இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையேயான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கண்டியில் இன்று நடந்தது. டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார். பும்ராவின் பந்து வீச்சு வேகத்தில் இலங்கை அணி திணறியது. இந்நிலையில் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 217 ரன்கள் எடுத்தது.

இலங்கை அணியில் அதிகப்பட்சமாக லஹிரு திரிமன்னெ 80 ரன்கள் எடுத்தார். இதையடுத்து 218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 45.1 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி தொடரை கைப்பற்றியது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரோஹித் சர்மா 124 ரன்களும், தோனி 67 ரன்களும் எடுத்துள்ளனர்.

சாதனை படைத்தார் தோனி 2
Indian cricketer Rohit Sharma (L) and Mahendra Singh Dhoni (R) sit on the ground as the match was stopped after fans started throwing bottles to the ground during the third one day international (ODI) cricket match between Sri Lanka and India at the Pallekele International Cricket Stadium in Pallekele on August 27, 2017. / AFP PHOTO / ISHARA S. KODIKARA (Photo credit should read ISHARA S. KODIKARA/AFP/Getty Images)

தோனியின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்று இந்திய கிரிக்கெட்அணியின் முன்னாள் அதிரடி வீரர் சேவாக்கூறினார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *