கார் பிரியரான மகேந்திரசிங் டோனி கார் வாங்கும், விற்கும் நிறுவனமான கார்ஸ் 24 நிறுவனத்தில் இணைய உள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மஹிந்திர சிங் டோனி, கார் வாங்கும், விற்கும் நிறுவனமான கார்ஸ் 24 நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் பங்குதாரராகவும், தூதராகவும் பொறுப்பேற்பார் எனக் கூறப்படுகிறது.
கடந்த 2015-ம் ஆண்டு தொடங்கப்பட்ட கார்ஸ் 24 நிறுவனம், இந்தியாவின் மிகப்பெரிய கார் வாங்கும், விற்கும் தளமாக உள்ளது. கார்களை எளிதாக  விற்கவும் பயன்படுத்திய கார்களை வாங்கவும் கார்ஸ் 24 உதவுகிறது. தற்போது 35 நகரங்களில் 155-க்கும் மேற்பட்ட கிளைகள் கொண்டுள்ள கார்ஸ் 24 நிறுவனம், இரண்டாம் தர நகரங்களில் 300-க்கும் மேற்பட்ட இடங்களில் விரிவடைவதைக் குறிக்கோளாக இந்நிறுவனம் கொண்டுள்ளது.
இந்நிலையில், கார்ஸ் 24 நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் பங்குதாரராகவும், தூதராகவும் பொறுப்பேற்பார் என கார்ஸ் 24 நிறுவனத்தின் துணை நிறுவனர் மற்றும் நிர்வாக தலைமை இயக்குநர் விக்ரம் சோப்ரா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கார்ஸ் 24 நிறுவனத்தின் துணை நிறுவனர் மற்றும் நிர்வாக தலைமை இயக்குநர் விக்ரம் சோப்ரா கூறுகையில்,
“கார்ஸ் 24 குடும்பத்திற்கு டோனியை வரவேற்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். அவர் பெரும்பாலான இந்தியர்களுக்கு ஒரு முன்மாதிரி மற்றும் ஹீரோவாக உள்ளார். டோனி எதிலும் புதுமையை விரும்புபவர். அவரின் தொடர் தேடல்கள், புதுமை மற்றும் தீர்வுகளைக் காணும் அவரது திறன் ஆகியவைதான் அவரை இந்திய வரலாற்றில் மிகவும் புகழ்பெற்ற கேப்டனாக ஆக்கியுள்ளது என்றார். மேலும் இந்த ஒப்பந்தம் குறித்த முழு அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார்.
டோனியின் இந்த முதலீட்டின் மூலம் அவர் கிரிக்கெட் ஓய்விற்க்கு பின் இது போன்ற பல்வேறு தொழிகளில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், தோனி கடந்த 2011-ம் ஆண்டு முதல் இந்திய ராணுவ பாராசூட் ரெஜிமெண்டில் லெப்டினெண்ட் பதவியில் உள்ளார். தோனி அவ்வப்போது இராணுவ பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது தோனி பாரா டி ஏ பாராசூட் ரெஜிமெண்டில் சேர்ந்து  ஜம்மு காஷ்மீரில் கடந்த ஜூலை 31 -ம் தேதியில் இருந்து ஆகஸ்ட் 15-ம் தேதி வரை பயிற்சி பெற்று வருகிறார்.இந்நிலையில் தோனி ஜம்மு காஷ்மீரில் ஒரு கிரிக்கெட்  அகாடமி ஒன்று தொடங்க திட்டமிட்டு உள்ளதாகவும் , அங்கு உள்ள இளைஞர்களை ஊக்குவிக்க அந்த அகாடமியை தொடங்கி  தோனி இலவசமாக பயிற்சி கொடுக்க திட்டமிட்டு உள்ளதாகவும் , தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக மத்திய விளையாட்டு அமைச்சர் அமைச்சகத்துடன் அவர் பேசியதாக கூறப்படுகிறது. • SHARE

  விவரம் காண

  விராட் கோஹ்லி இந்த விசயத்தை சரி செய்து கொள்ள வேண்டும்; அட்வைஸ் கொடுக்கும் கங்குலி !!

  விராட் கோஹ்லி இந்த விசயத்தை சரி செய்து கொள்ள வேண்டும்; அட்வைஸ் கொடுக்கும் கங்குலி ஒவ்வொரு போட்டிக்கும் தேவையான ஆடும் லெவனை தேர்வு செய்வதில்...

  இந்திய அணி அவ்வளவு வொர்த் எல்லாம் கிடையாது; சீன் போடும் வெஸ்ட் இண்டீஸ் வீரர் !!

  முதல் டெஸ்ட் போட்டியில் மே.இ.தீவுகள் அணி 2ம் நாள் முடிவில் 189 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. இஷாந்த் சர்மா...

  ஆர்ச்சரிடன் அடவாடிக்கு ஆப்படித்த ஆஸ்திரேலியா!! இங்கிலாந்துதிற்கு எட்ட முடியாத இலக்கு நிர்ணயம்!

  லீட்ஸ் டெஸ்ட் போட்டியின் 3ம் நாளான இன்று ஆஸ்திரேலியா தன் 2வது இன்னிங்சில் 246 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து இங்கிலாந்து...

  இஷாந்த் சர்மா 5 விக்கெட் எடுக்க பும்ரா கொடுத்த மிக வித்யாசமான ஐடியா!! இஷாந்த் சர்மா வெளியிட்ட தகவல்

  2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் மே.இ.தீவுகளும், இந்தியாவும் ஆடுகின்றன. இதன் முதல் ஆட்டம் ஆண்டிகுவாவில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற மே.இ. தீவுகள்...

  அடுத்த டி20 தொடருக்கான அணி அறிவிப்பு!! ஓய்வை அறிவிக்கப்போகும் சீனியர் வீரருக்கு அணியில் இடம்!!

  நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இலங்கை-நியூசிலாந்து அணிகள்...