விக்கெட் கீப்பிங்கில் புதிய சரித்திரம் படைத்தார் தல தோனி !! 1
விக்கெட் கீப்பிங்கில் புதிய சரித்திரம் படைத்தார் தல தோனி

தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியின் மூலம் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி புதிய சரித்திரம் ஒன்றை படைத்துள்ளார்.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்காவுடன் மூன்று டெஸ்ட், ஆறு ஒருநாள் மற்றும் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கேற்றுள்ளது.

இதில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி இழந்த நிலையில், இரு அணிகள் இடையேயான ஆறு ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.

விக்கெட் கீப்பிங்கில் புதிய சரித்திரம் படைத்தார் தல தோனி !! 2

இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவில் இரண்டு போட்டியிலும் அபார வெற்றி பெற்ற இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ள நிலையில், இரு அணிகள் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி கேப்டவுனில் நேற்று நடைபெற்றது.

இதில் கோஹ்லியின் அதிரடி ஆட்டத்தின் மூலம் இந்திய அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் தென் ஆப்ரிக்கா அணியின் கேப்டன் மார்கமை தனது மின்னல் வேக ஸ்டெம்பிங் மூலம் வெளியேற்றிய இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, ஒருநாள் அரங்கில் 400 வது விக்கெட் வீழ்ச்சிக்கு காரணமாக விக்கெட் கீப்பர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

விக்கெட் கீப்பிங்கில் புதிய சரித்திரம் படைத்தார் தல தோனி !! 3
India’s Wicket Keeper Mahindra Singh Dhoni holds up the ball after catching out West Indies’ batsman Rovman Powell during the fifth One Day International (ODI) match between West Indies and India at the Sabina Park Cricket Ground in Kingston, Jamaica, on July 6, 2017.

இதன் மூலம் ஒருநாள் அரங்கில் 400 விக்கெட் வீழ்ச்சிக்கு காரணமான நான்காவது விக்கெட் கீப்பர் என்ற பெருமை பெற்றார்.

தவிர, இம்மைல்கல்லை எட்டிய முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனை படைத்தார். இப்பட்டியலில் இலங்கையின் சங்ககரா (482 விக்கெட்), ஆஸ்திரேலியாவின் கில்கிறிஸ்ட் (472 விக்கெட்), தென் ஆப்ரிக்காவின் மார்க் பவுச்சர் ஆகியோர் முதல் மூன்று இடங்களில் உள்ளனர்.

 

Leave a comment

Your email address will not be published.