துபாயிலும் தோனியின் ஹெலிகாப்டர் ஷாட்கள் பறக்கும்; சுரேஷ் ரெய்னா !! 1

துபாயிலும் தோனியின் ஹெலிகாப்டர் ஷாட்கள் பறக்கும்; சுரேஷ் ரெய்னா

இந்த வருட ஐ.பி.எல் தொடரிலும் தோனி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என சின்ன தல சுரேஷ் ரெய்னா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் விக்கெட் கீப்பருமான தோனி, கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடந்த 50 ஓவர் உலக கோப்பைக்கு பிறகு இந்திய அணியில் இருந்து முழுவதாக ஓரங்கட்டப்பட்டார். உலக கோப்பையுடன் தோனி ஓய்வுபெற்று விடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஓய்வு அறிவிக்காத தோனி, அவரது கிரிக்கெட் எதிர்கால குறித்து ஆளாளுக்கு கருத்து தெரிவித்து வரும் போதிலும், தோனியோ தொடர்ந்து மொளனம் காத்து வருகிறார்.

துபாயிலும் தோனியின் ஹெலிகாப்டர் ஷாட்கள் பறக்கும்; சுரேஷ் ரெய்னா !! 2

அவர் ஓராண்டாக எந்த விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் ஆடாத சூழலில், அவரது பெயர், பிசிசிஐ-யின் வீரர்கள் ஒப்பந்த பட்டியலில் இடம்பெறவில்லை. ஆனாலும் ஐபிஎல்லில் சிறப்பாக ஆடி தனது ஃபார்மை நிரூபித்து டி20 உலக கோப்பை அணியில் இடம்பெறும் முனைப்பில் இருப்பதாக தெரிகிறது.

தோனி இந்திய அணியில் மீண்டும் இடம்பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும், இந்த தொடர் தோனிக்கு மிக முக்கியமான தொடராகவே பார்க்கப்படுகிறது. முன்னாள், இந்நாள் வீரர்கள் என பலரும் இந்த தொடரில் தோனியின் ஆட்டத்தை பார்ப்பதற்கு மிகுந்த ஆவலுடன் காத்திருப்பதை ஓபனாக தெரிவித்து வருகின்றனர்.

துபாயிலும் தோனியின் ஹெலிகாப்டர் ஷாட்கள் பறக்கும்; சுரேஷ் ரெய்னா !! 3

தன்னை பற்றி விவாதம் தினம் தினம் நடைபெற்று வந்தாலும் அதற்கு வாயே திறக்காத தோனியோ, ஐ.பி.எல் தொடருக்கான பயிற்சியை சத்தமே இல்லாமல் ராஞ்சி மைதானத்தில் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்தநிலையில், தோனி குறித்து பேசிய சென்னை அணியின் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா, இந்த வருட ஐ.பி.எல் தொடரிலும் தோனி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

துபாயிலும் தோனியின் ஹெலிகாப்டர் ஷாட்கள் பறக்கும்; சுரேஷ் ரெய்னா !! 4

இது குறித்து ரெய்னா பேசியதாவது;

வயது என்பது ஒரு தடைகல் தான், ஆனால் தோனி விசயத்தில் அது மாற்றமானது. தோனி பிறவியிலேயே ஒரு விளையாட்டு வீரர், அவரது ஆட்டத்திறன் எவ்வாறு இருக்கும் என்பதை நான் நன்கு அறிவேன். 140 – 150 கிமீ வேகத்தில் வரும் பந்துகளை சிக்ஸர் அடிப்பது மிகவும் கடினம் ஆனால் தோனியால் அது முடியும். எப்பொழுதும் தோனி தான் எங்களது வழிகாட்டி. இந்த வருட ஐ.பி.எல் தொடர் நடைபெற இருக்கும் துபாய் மைதானங்களிலும் தோனியின் ஹெலிகாப்டர் ஷாட்கள் பறக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *