உலகக்கோப்பையில் தோனியின் சேவை இந்திய அணிக்கு தேவை; சுரேஷ் ரெய்னா சொல்கிறார் !! 1

உலகக்கோப்பையில் தோனியின் சேவை இந்திய அணிக்கு தேவை; சுரேஷ் ரெய்னா சொல்கிறார்

உலககக்கோப்பை கிரிக்கெட் தொடரில், முன்னாள் கேப்டன் தோனியின் அனுபவத்தை இந்திய அணி பயன்படுத்தி கொள்ள வேண்டும் என இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரரான சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் மே மாதம் 30-ந்தேதி தொடங்குகிறது. கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்று இந்தியா எனக் கருதப்படுகிறது. ஆனால், 4-வது இடத்தில் களம் இறங்கி பேட்டிங் செய்வது யார் என்பதில் பெரிய கேள்வி எழுந்துள்ளது.

உலகக்கோப்பையில் தோனியின் சேவை இந்திய அணிக்கு தேவை; சுரேஷ் ரெய்னா சொல்கிறார் !! 2

இந்நிலையில் டோனியின் அனுபவத்தை இந்திய அணி பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று இடது கை பேட்ஸ்மேன் ஆன சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சுரேஷ் ரெய்னா கூறுகையில் ‘‘சமீபத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து தொடரில் டோனி கணிசமான ரன்கள் அடித்துள்ளார். அதோடு இளம் வீரர்களை சிறப்பாக வழி நடத்துகிறார். குறிப்பாக இளம் பந்து வீச்சாளர்களுக்கு டோனி அறிவுரை பயனுள்ளதாக இருக்கிறது.

டோனி அதிக அளவிலான ஏற்றம் இறக்கங்களை கண்டுள்ளார். பல உலகக்கோப்பை தொடரில் விளையாடியுள்ளார். ஐபிஎல் இறுதிப் போட்டிகளில் அதிக அளவில் பங்கேற்றுள்ளார். இப்படி இருக்கும்போது ஏன் இந்திய அணியுடன் உலகக்கோப்பை தொடருக்க அவர் செல்லக்கூடாது.

உலகக்கோப்பையில் தோனியின் சேவை இந்திய அணிக்கு தேவை; சுரேஷ் ரெய்னா சொல்கிறார் !! 3

டோனி மிகவும் அற்புதமாக பேட்டிங் செய்து ரன்கள் குவித்து வருகிறார். இதனால் என்னை பொறுத்தவரையில் உலகக்கோப்பையில் டோனி நான்காவது இடத்தில் களம் இறங்கி பேட்டிங் செய்ய வேண்டும்’’ என்றார்.

கோஹ்லியை புகழ்ந்து தள்ளிய ஹைடன்;

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான கிரிக்கெட் தொடர் குறித்து, ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான மேத்யூ ஹைடன் ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது;

இந்திய அணியில் விராத் கோலி மற்றும் ரோகித் சர்மா நன்றாக விளையாடிவருவதால் ஆஸ்திரேலியா அணிக்கு சவாலாக இருக்கும். அத்துடன் ஆஸ்திரேலிய அணியில் ரிச்சர்ட்சன் சிறப்பாக பந்துவீசி வந்தாலும் அவருக்கு இது முதல் இந்திய தொடர் என்பதால் பெரிய சவால் காத்திருக்கிறது. ஆனாலும் இந்திய ஆட்டக்காரர்களின் தற்போதயை ஆட்டம் சிறப்பாக உள்ளதால் விராட் கோலி இந்தத் தொடரில் ஆதிக்கம் செலுத்துவார்”எனக் கூறினார்.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *