பந்துவீச்சாளர்கள் இல்லை… வெற்றிக்கு இது தான் முக்கிய காரணம்; தோனி பெருமிதம் !! 1

பஞ்சாப் அணிக்கு எதிரான வெற்றியை தொடர்ந்து சென்னை அணியின் கேப்டனான தோனி மும்பை வான்கடே ஆடுகளத்தை பாராட்டி பேசியுள்ளார்.

14வது ஐபிஎல் சீசனின் நேற்றைய போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கே.எல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின.

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

பந்துவீச்சாளர்கள் இல்லை… வெற்றிக்கு இது தான் முக்கிய காரணம்; தோனி பெருமிதம் !! 2

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணியில் இளம் வீரரான ஷாருக் கானை (47) தவிர மற்ற வீரர்கள் அனைவரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து வெளியேறியதால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த பஞ்சாப் கிங்ஸ் அணி 106 ரன்கள் எடுத்தது.

பந்துவீச்சாளர்கள் இல்லை… வெற்றிக்கு இது தான் முக்கிய காரணம்; தோனி பெருமிதம் !! 3

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் அதிகபட்சமாக தீபக் சாஹர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதே போல் சாம் கர்ரான், டூவைன் பிராவோ மற்றும் மொய்ன் அலி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.

இதனையடுத்து 107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிக எளிய இலக்கை துரத்தி களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ருத்துராஜ் கெய்க்வாட் 5 ரன்னில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தாலும், மற்றொரு துவக்க வீரரான டூபிளசிஸ் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 36 ரன்களும், மூன்றாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய மொய்ன் அலி 46 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் 15.4 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழப்பிற்கு இலக்கை எட்டிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பந்துவீச்சாளர்கள் இல்லை… வெற்றிக்கு இது தான் முக்கிய காரணம்; தோனி பெருமிதம் !! 4

பஞ்சாப் கிங்ஸ் அணி சார்பில் முகமது ஷமி 2 விக்கெட்டுகளையும், அர்ஸ்தீப் சிங் மற்றும் முருகன் அஸ்வின் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.

இந்தநிலையில், பஞ்சாப் அணிக்கு எதிரான இந்த வெற்றி குறித்து பேசிய சென்னை அணியின் கேப்டன் தோனி, மும்பை வான்கடே ஆடுகளத்தை பாராட்டி பேசியுள்ளார்.

பந்துவீச்சாளர்கள் இல்லை… வெற்றிக்கு இது தான் முக்கிய காரணம்; தோனி பெருமிதம் !! 5

இது குறித்து தோனி பேசுகையில், “கடந்த 2011ம் ஆண்டில் தான் கடைசியாக சென்னை ஆடுகளம் பந்துவீசுவதற்கு சாதகமாக இருந்தது, அதன்பிறகு எவ்வளவோ முயற்சி செய்தும் இன்று வரை சென்னை ஆடுகளத்தை பழையபடி மாற்ற முடியவில்லை. இங்கு எங்களுக்கு நல்ல பிட்ச் கிடைத்துள்ளது. பந்துகளின் வேகத்திற்கும், சுழலுக்கும் இந்த ஆடுகளம் நன்கு கை கொடுக்கிறது. தீபக் சாஹர் டெத் ஓவர்கள் சிறப்பாக பந்துவீசுவதில் கை தேர்ந்தவராக மாறிவிட்டார். ஆனால் நான் பஞ்சாப் அணியை துவக்கத்தில் இருந்தே நெருக்கடிக்குள் வைத்து கொள்ள விரும்பினேன், அதற்காகவே தீபக் சாஹர் துவக்கத்திலேயே 4 ஓவர்களையும் வழங்கிவிட்டோம். தீபக் சாஹர் மிக சிறப்பாக அந்த 4 ஓவர்களையும் வீசினார். எங்களிடம் இருக்கும் வீரர்களை சரியாக பயன்படுத்தும் நோக்கத்தில் தான் மொய்ன் அலி பேட்டிங் ஆர்டரில் முன்னதாக களமிறக்கினோம். மொய்ன் அலி மிக சிறந்த ஆட்டக்காரர். அடுத்தடுத்த போட்டிகளிலும் சிறப்பாக செயல்படுவோம்” என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *