என்னை ஏமாற்றிவிட்டார்கள்; உச்சந்தீமன்றத்தின் கதவை தட்டும் தல தோனி !! 1

என்னை ஏமாற்றிவிட்டார்கள்; உச்சந்தீமன்றத்தின் கதவை தட்டும் தல தோனி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி, அமரப்பள்ளி குழுமத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனமான அமரப்பள்ளி கடும் நிதிநெருக்கடியில் சிக்கியுள்ளது. வீடு கட்டித் தருவதாகச் சொல்லி பலரிடம் பணம் வாங்கியது. ஆனால், சொன்ன தேதியில் அதைக் கட்டிக் கொடுக்கவில்லை. இதையடுத்து பணம் கொடுத்த வர்கள் நிறுவனத்துக்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ளனர். இந்த நிறுவனத்தில், ராஞ்சியில் தனக்கும் பங்களா வேண்டும் என்று ஒப்பந்தம் செய்திருந்தார் கிரிக்கெட் வீரர் தோனி. இதையடுத்து, அவரை விளம்பர தூதராக நியமித்தது அமரப்பள்ளி நிறுவனம். 2009 ஆம் ஆண்டில் இருந்து 2016 ஆம் ஆண்டு வரை, அந்நிறுவனத்தின் விளம்பர தூதராக இருந் தார் தோனி.

என்னை ஏமாற்றிவிட்டார்கள்; உச்சந்தீமன்றத்தின் கதவை தட்டும் தல தோனி !! 2

இந்நிலையில் இந்த நிறுவனத்துக்கு எதிராக தோனி, உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். அதில், ‘ராஞ்சியில், ’அமரப்பல்லி சஃபாரி’ திட்டத்தில் பங்களா வீடு ஒன்றை முன்பதிவு செய்திருந்தேன். அதேபோல அந்நிறுவனத்தின் அந்த திட்டத்துக்கு விளம்பரத் தூதராகவும் இருந்தேன். அந்நிறுவனம் விளம்பரத் தூதருக்கான பணத்தை தராமல் பங்களாவையும் தராமல் என்னை ஏமாற்றியுள்ளது’ என்று கூறியுள்ளார்.

அமரப்பள்ளி நிறுவனத்திடம் இருந்து 40 கோடி ரூபாய் பெற்று தருமாறு உச்ச நீதிமன்றத்தில் தோனி, மனு தாக்கல் செய்தி ருந்தது குறிப்பிடத்தக்கது.

என்னை ஏமாற்றிவிட்டார்கள்; உச்சந்தீமன்றத்தின் கதவை தட்டும் தல தோனி !! 3

இதுவரை 46 ஆயிரம் பேர், தாங்கள் பணம் கொடுத்த பின்னரும் அமரப்பள்ளி நிறுவனம் வீடு ஒதுக்கித் தரவில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்நிலையில் இந்த நிறுவனத்துக்கு எதிராக தோனி, உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். அதில், ‘ராஞ்சியில், ’அமரப்பல்லி சஃபாரி’ திட்டத்தில் பங்களா வீடு ஒன்றை முன்பதிவு செய்திருந்தேன். அதேபோல அந்நிறுவனத்தின் அந்த திட்டத்துக்கு விளம்பரத் தூதராகவும் இருந்தேன். அந்நிறுவனம் விளம்பரத் தூதருக்கான பணத்தை தராமல் பங்களாவையும் தராமல் என்னை ஏமாற்றியுள்ளது’ என்று கூறியுள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *