4வது இடத்தில் தோனி ஆட் வேண்டும்: அனில் கும்ளே!! 1

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரை இந்திய அணி இழந்ததையடுத்து உலகக்கோப்பைக்கான இந்திய அணியின் போதாமைகள் குறித்த விமர்சனங்கள் வரத்தொடங்கியுள்ளன.

கம்பீர் இந்த அணியில் தோனியைச் சேர்த்தாலும் வலுவடையாது என்று சாட அனில் கும்ப்ளே தோனியை 4ம் இடத்தில் களமிறக்குவதுதான் சிறந்தது என்று கூறியுள்ளார்.

இந்திய அணியின் பயிற்சியாளராக அனில் கும்ப்ளே இருந்த போது, இவரது கண்டிப்பான முறைகளில் அதிருப்தியடைந்த விராட் கோலி, இவரை மாற்றுமாறு தினப்படி பிசிசிஐ-யை வலியுறுத்தி கடைசியில் கும்ப்ளே கோலியை தர்மசங்கடப்படுத்தாமல் தானே பெருந்தன்மையாக ராஜினாமா செய்ததோடு, தனக்கும் கோலிக்கும் இடையே என்ன நடந்தது என்பதை இன்று வரை வெளியிடாமல் கோலியிடம் பெருந்தன்மை காட்டி வருகிறார்.4வது இடத்தில் தோனி ஆட் வேண்டும்: அனில் கும்ளே!! 2

அவர் கருத்து கூறுவதையே குறைத்துக் கொண்ட நிலையில் இன்று அவரிடம் அணி பற்றிக் கேட்ட போது, “கடந்த 2 ஆண்டுகளாக இந்தியா அணியின் வெற்றிகளைப் பார்த்தோமனால் முதல் 3 பேட்ஸ்மென்கள் நன்றாக ஆடியதனால்தான் என்று நமக்குத் தெரியவரும். இன்றும் இதே நிலைதான்.

50 ஓவர் போட்டிகளில் முதல் 3 பேட்ஸ்மென்கள் பங்களிப்பு செய்தால்தான் வெற்றி சாத்தியமாகும். என்னைப்பொறுத்தவரை எம்.எஸ்.தோனி 4ம் நிலையில்தான் களமிறங்க வேண்டும்.

5,6,7 இடங்களைப் பற்றித்தான் முடிவு எடுக்க வேண்டும். இங்குதான் கொஞ்சம் ஓவராகப் போய்விட்டனர், 4,5, 6ம் இடங்களுக்கு தோனியைத் தவிர யார்யாரெல்லாம் பொருத்தமாக இருப்பார்கள் என்று கொஞ்சம் ஓவராகப் பரிசோதனைகள் செய்துவிட்டனர். வீரர்களை மாற்றுவதும், அனுப்புவதுமாக முயற்சி செய்தனர். இதுதான் அணியை நிலையற்றத் தன்மைக்கு இட்டுச் சென்றுள்ளது. அதாவது வெளியிலிருந்து பார்க்கும் போது.

இறுதிப்போட்டி, அல்லது அரையிறுதியில் டாப் 3 சரியாக ஆடவில்லை என்றால் என்ன செய்வார்கள்? அப்போது அதனை ஈடுகட்ட மிடில் ஆர்டர் வலுவாக இருக்க வேண்டும். இங்குதான் வீரர்களுக்கு போதுமான வாய்ப்புகளை வழங்கவில்லை. குறிப்பாக உலகக்கோப்பை இருக்கும் போது முன்னதாக நிறைய வாய்ப்புகளை வழங்கியிருக்க வேண்டும் மாற்றிக்கொண்டேயிருந்தால் எப்படி சீர்மை கிடைக்கும்? மிடில் ஆர்டருக்காக வீரர்களைத் தேர்வு செய்ததில் சீர்மை இல்லை.4வது இடத்தில் தோனி ஆட் வேண்டும்: அனில் கும்ளே!! 3

ஆகவே என்னைப் பொறுத்தவரையில் டாப் 4 வீரர்கள்தான் 70-80% போட்டிகளை வென்று தருகின்றனர்.  டாப் 4 வீரர்கள் தரமாக இருக்க வேண்டும், அதனால்தன தோனியை நான் 4ம் இடத்துக்கு நிரந்தரமாக்க விரும்புகிறேன். அதாவது தோனி  மிடில் ஆர்டரை மேனேஜ் செய்ய வேண்டும் அதற்கு 4ம் நிலைதான் சரி. அதைவிடுத்து மிடில் ஆர்டரையும் ஒருங்கிணைக்கும் படி ஆடி ரன் விகிதத்தையும் தக்கவைப்பது கடினம், அப்படிப்பட்ட இக்கட்டான இடத்தில் தோனியை இறக்குதல் கூடாது.

இவ்வாறு அனில் கும்ப்ளே கிரிக் நெக்ஸ்ட் ஊடகத்தில் தெரிவித்துள்ளார்.

அனுபவ வீரரான எம்எஸ் டோனியின் முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிடக் கூடாது என்று மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை ஆஸ்திரேலியா 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது. 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த இந்தியா, கடைசி 3 போட்டியிலும் தோல்வியடைந்து தொடரை இழந்தது.

இந்தத் தொடரில் கடைசி 2 போட்டிகளில் விக்கெட் கீப்பர் டோனிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது. விக்கெட் கீப்பர் பணியை ரி‌ஷப் பந்த் பார்த்தார். ஆனால் அவர் சில தவறுகளை செய்தார்.

வருகிற மே மாதம் 30-ந்தேதி தொடங்கும் உலகக்கோப்பை போட்டிக்கு முன்பாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை இந்தியா இழந்துள்ளது. இதனால் விமர்சனத்துக்குள்ளானது. கடைசி இரண்டு போட்டியிலும் டோனி விளையாடி இருந்தால் தோல்வி ஏற்பட்டு இருக்காது என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தெரிவித்து இருந்தனர்.

4வது இடத்தில் தோனி ஆட் வேண்டும்: அனில் கும்ளே!! 4

இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க், மிடில் ஆர்டர் வரிசையில் டோனி தேவை என்று தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டரில் ‘‘டோனியின் முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிடக்கூடாது. ஏனென்றால் மிடில் ஆர்டர் வரிசையில் அனுபவம் மிகவும் முக்கியம்’’ என பதிவிட்டுள்ளார்.

கேப்டன் விராட் கோலி நேற்று அளித்த பேட்டியின்போது, ‘‘உலகக்கோப்பை போட்டி தொடரில் விளையாடும் இந்திய லெவன் அணியில் யார் இடம் பிடிப்பார்கள் என்பது ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு விட்டது. சீதோஷ்ண நிலையை பொறுத்து ஒரு இடத்தில் மட்டும் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்’’ என தெரிவித்து உள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *