JCC
ஒரு தொழில்முறை கிரிக்கெட் வீரராக மாறவேண்டுமா?
இங்கே ரெஜிஸ்டர் செய்யுங்கள்

*T&C Apply

முதலில் இந்தியா க்ரீன் அணியின் கேப்டன் தமிழக வீரர் அபினவ் முகுந்த் தொடரில் இருந்து வெளியேறினார். அவரது , விடுப்பில் தினேஷ் கார்த்திக் கேப்டனாக செயல்படுவார்.

தற்போது இசாந்த் சர்மாவைத் தொடர்ந்து, இந்திய ஏ அணிக்காக ஆடிய போது காயம் ஆன ஸ்ரேயஸ் அய்யர் மற்றும் விஜய் சங்கர் ஆகியோரும் துலீப் ட்ராபியில் ஆடப் போவதில்லை எந்த் தெரிகிறது.

அபிநவ் முகுந்த் துலீப் ட்ராபி தொடரில் இருந்து வெளியேறினார் 1

அவர்கள் இருவரும் இன்னும் முழுமையாக குணம் அடையாத காரணத்தால் தொடரிலிருந்து வெளியேருவதாக தகவ்ல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக காஷ்மிர் வீரர் பர்வேஷ் ரசூல் ட்ராபியில் தேர்ந்தெடுக்க தந்து பெயரேயே பதிவு செய்யவில்லை.தவாள் குல்கர்னியும் தனது சொந்த காரணகளுக்காக வெளியேறியுள்ளார்.

அவர்களுக்கு மாற்றாக மும்பை இளம் வீரர் பிரிதிவ் சா மற்றும் வருன் ஆரோன் அழைக்கப்பட்டுள்ளனர்,

மேலும், சமீப காலமாக சர்ச்சையில் சிக்க வந்த அம்பட்டி ராயுடுவும் காயம் காரணமாக தொடரை விட்டு வெளியேறியிருக்கிறார். அவருக்கு பதிலாக சட்டிகர் வீரர் பங்கஜ் ராவ் அழைக்கப்பட்டுள்ளார்.

மேலும், வேகப்பந்து வீச்சாளார் சித்தார்த் கவுல் இந்தியா க்ரீன் அனியில் இருந்து இந்திய ரெட் அணிக்கு மாற்றப் பட்டுள்ளார்.

தினேஷ் கார்த்திக் அபாரம், இந்தியா ரெட் வெற்றி!!!

முதலில் இந்தியா க்ரீன் அணியின் கேப்டன் தமிழக வீரர் அபினவ் முகுந்த் தொடரில் இருந்து வெளியேறினார். அவரது , விடுப்பில் தினேஷ் கார்த்திக் கேப்டனாக செயல்பட்டார்.

இந்நிலையில், துலீ்ப் டிராபி கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி கடந்த 7-ந்தேதி முதல் நேற்று வரை நடைபெற்றது.

அபிநவ் முகுந்த் துலீப் ட்ராபி தொடரில் இருந்து வெளியேறினார் 2

இதில் இந்தியா ரெட் – இந்தியா க்ரீன் அணிகள் மோதின. இந்தியா ரெட் அணிக்கு தினேஷ் கார்த்திக்கும், இந்தியா க்ரீன் அணிக்கு கருண் நாயரும் கேப்டனாக செயல்பட்டனர்.

டாஸ் வென்ற தினேஷ் கார்த்திக் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா ரெட் 323 ரன்கள் குவித்தது.

தொடக்க வீரர் பன்சால் 105 ரன்னும், தினேஷ் கார்த்திக் 50 ரன்னும், சட்டர்ஜீ 52 ரன்னும் சேர்த்தனர்.

இந்தியா க்ரீன் அணியில் முரளி விஜய் 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

அபிநவ் முகுந்த் துலீப் ட்ராபி தொடரில் இருந்து வெளியேறினார் 3
Play at the thied day of the first test match between the India Red and India Green at the Duleep trophy at the Greater Noida stadium in Noida , UP on thursday. Express Photograph by Tashi Tobgyal New Delhi 250816

பின்னர் இந்தியா க்ரீன் அணி முதல் இன்னிங்சை தொடங்கியது.

சோப்ரா (65), கருண் நாயர் (37) ஆகியோர் மட்டுமே தாக்குப்பிடித்து விளையாட, மற்றவர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.

இதனால் இந்தியா க்ரீன் 157 ரன்னில் சுருண்டது.

கவுதம் ஐந்து விக்கெட்டும், கரண் சர்மா 4 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். 166 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா ரெட் 2-வது இன்னிங்சை தொடங்கியது.

தொடக்க வீரர் பன்சால் (133 நாட்அவுட்), கேப்டன் தினேஷ் கார்த்திக் (100 நாட்அவுட்) ஆகியோர் சதம் அடித்தனர்.

அபிநவ் முகுந்த் துலீப் ட்ராபி தொடரில் இருந்து வெளியேறினார் 4

அணியின் ஸ்கோர் 2 விக்கெட் இழப்பிற்கு 307 ரன்னாக இருக்கும்போது இந்தியா ரெட் 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது.

இதனால் இந்தியா க்ரீன் அணிக்கு 474 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்தியா ரெட்.

3-வதுநாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 98 ரன்கள் எடுத்திருந்த இந்தியா க்ரீன், நேற்றைய கடைசி நாளில் நெருக்கடியுடன் களம் இறங்கியது.

இந்தியா க்ரீன் அணி கேப்டன் கருண் நாயர் 120 ரன்கள் அடித்தாலும், அந்த அணியால் 303 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

இதனால் 170 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா ரெட் அணி வெற்றி பெற்றது. கரண் சர்மா 6 விக்கெட்டும், வேகபந்து வீச்சாளர் சித்தார்த் கவுல் நான்கு விக்கெட்டும்வீழ்த்தினர்.

அபிநவ் முகுந்த் துலீப் ட்ராபி தொடரில் இருந்து வெளியேறினார் 5
Team Blue looking to Third Empire decision after Stump attempt against Team Red batsman Stuart Binny in the final match of Duleep Trophy at Shaheed Vijay Singh Pathik Stadium in Greater Noida on Monday. EXPRESS PHOTO BY PRAVEEN KHANNA 12 09 2016.

இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்த பன்சால் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

இந்தியா ப்ளூ – இநதியா ரெட் அணிகளுக்கு இடையிலான அடுத்த போட்டி கான்பூரில் 13-ந்தேதி தொடங்குகிறது. • SHARE
 • விவரம் காண

  இது மட்டும் நடந்துவிட்டால் ரோஹித் சர்மாவை யாரும் தடுக்க முடியாது; முன்னாள் வீரர் ஓபன் டாக் !!

  இது மட்டும் நடந்துவிட்டால் ரோஹித் சர்மாவை யாரும் தடுக்க முடியாது; முன்னாள் வீரர் ஓபன் டாக் முதல் 45 நிமிடங்கள் ரோஹித் சர்மா நிலைத்து...

  அந்த இந்திய வீரருக்கு நடந்தது மிகப்பெரும் அநியாயம்; முன்னாள் வீரர் ஆதங்கம் !!

  அந்த இந்திய வீரருக்கு நடந்தது மிகப்பெரும் அநியாயம்; முன்னாள் வீரர் ஆதங்கம் சீனியர் வீரர்களில் ஒருவரான ரஹானே இந்திய அணியில் இருந்து முழுவதுமாக புறக்கணிப்பட்டது...

  கேப்டன் பதவியில் நான் சொதப்பியதற்கு இவர் மட்டும் தான் காரணம்; கங்குலி அதிரடி பேச்சு !!

  கேப்டன் பதவியில் நான் சொதப்பியதற்கு இவர் மட்டும் தான் காரணம்; கங்குலி அதிரடி பேச்சு ஐ.பி.எல் தொடருக்கான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில், கவுதம்...

  இந்திய அணியின் அடுத்த சேவாக் இவர் தான்; முன்னாள் வீரர் அதிரடி கருத்து !!

  இந்திய அணியின் அடுத்த சேவாக் இவர் தான்; முன்னாள் வீரர் அதிரடி கருத்து இளம் வீரரான ப்ரிதீவ் ஷா, முன்னாள் வீரர் சேவாக்கை போன்று...

  ஐ.பி.எல் தொடர் வேண்டுமா..? வேண்டாமா..? வெளிப்படையாக பேசியுள்ளார் ஜாண்டி ரோட்ஸ் !!

  ஐ.பி.எல் தொடர் வேண்டுமா..? வேண்டாமா..? வெளிப்படையாக பேசியுள்ளார் ஜாண்டி ரோட்ஸ் ஐ.பி.எல் டி.20 தொடர் நடைபெறாமல் இந்த ஆண்டு நிறைவடைவதை தன்னால் நினைத்து கூட...