இந்தியாவில் சையது முஷ்டாக் அலி டி20 தொடர், விஜய் ஹசாரே டிராபி மற்றும் ஐபிஎல் போன்ற உள்ளூர் போட்டிகள் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அதே போல் இந்த ஆண்டும் சையது முஷ்டாக் அலி டி20 தொடர் நடைபெற்றது. இதில் தமிழக அணி கோப்பையை வென்று அசத்தியது.

இதையடுத்து தற்போது விஜய் ஹசாரே டிராபி 50 ஓவர் தொடர் நடைபெற்று வருகிறது. ஐபிஎல் தொடருக்கு முன் இந்த இரு தொடர்களும் நடைபெறுவதால் இளம் வீரர்கள் பலர் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி ஐபிஎல் தொடரில் தங்களது அணியில் விளையாடும் லெவனில் இடம்பிடிக்க போராடி வருகின்றனர். 

11 சிக்ஸர்கள்,19 பவுண்டரிகள் என 173 ரன்கள் குவித்த இஷான் கிஷன் ; குவியும் பாராட்டுக்கள் ! 2

இந்நிலையில், கடந்த பிப்ரவரி 20ஆம் தேதி நடைபெற்ற விஜய் ஹசாரே டிராபியில் மத்திய பிரதேஷ் மற்றும்  ஜார்காண்ட் அணி தங்களது முதல் சுற்றை விளையாடியது. இதில் டாஸ் வென்ற மத்திய பிரதேஷ் அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த ஜார்காண்ட் அணி அதிரடியாக விளையாடி 324 ரன்களில் வெற்றியை பெற்றது.

இதில் ஜார்காண்ட் அணியின் கேப்டன் மற்றும் தொடக்க வீரரான இஷான் கிஷன் 94 பந்துகளை எதிர்கொண்டு 173 ரன்கள் குவித்து அதிரடியாக விளையாடி இருக்கிறார். இதில் 19 பவுண்டரிகளையும் 5 சிக்சர்களையும் விளாசி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இஷான் கிஷனின் இந்த அதிரடியான ஆட்டத்தை கண்டு அனைவரும் தங்களது பாராட்டு தெரிவித்து வருகின்றனர். 

11 சிக்ஸர்கள்,19 பவுண்டரிகள் என 173 ரன்கள் குவித்த இஷான் கிஷன் ; குவியும் பாராட்டுக்கள் ! 3

இந்த போட்டியில் ஜார்காண்ட் அணி 422 ரன்களை குவித்ததன் மூலம் உள்ளூர் 50 ஓவர் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த அணியாக ஜார்காண்ட் அணி தற்போது சாதனை படைத்திருக்கிறது. மேலும் இஷான் கிஷன் ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக உள்ளூர் கிரிக்கெட்டில் ஒரே போட்டியில் அதிக ரன்கள் அடித்த வீரராக இருக்கிறார்.

இதன்மூலம் தோனி மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோரின் சாதனையை முறியடித்திருக்கிறார் இஷான் கிஷன். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக உள்ளூர் போட்டியில்  அதிகபட்சமாக தோனி 139 ரன்களும் தினேஷ் கார்த்திக் 151 ரன்களும் அடித்து இருக்கின்றனர். இஷான் கிஷன் தற்போது 173 ரன்கள் குவித்து சாதனை படைத்திருக்கிறார். இங்கிலாந்துக்கு எதிரான இந்திய டி20 தொடரில் இஷான் கிஷன் இடம் பிடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  

இந்த மும்பை இந்தியன்ஸ் வீரர் வேற லெவல் ; தோனி, தினேஷ் கார்த்திக் சாதனையை நொருக்கி அசத்தல் ! 2

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *