முன்னாள் வீரர் மரணம்; "எனது நாயகன் இனி வரமாட்டார்" இரங்கல் செய்தி சொன்ன கங்குலி! 1

எனது நாயகன் இனி வரமாட்டார் என அர்ஜென்டினா முன்னாள் கால்பந்து வீரர் டியாகோ மரடோனாவின் மரணத்திற்கு இரங்கல் செய்தி தெரிவித்துள்ளார் பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி.

கால்பந்து உலகில் கொடிகட்டிப் பறந்தவர்களுள் ஒருவரான டியாகோ மரடோனா அர்ஜெண்டினா நாட்டைச் சேர்ந்தவர். இவர் அந்த நாட்டிற்காக 1986 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை தொடரை வென்று மிகப்பெரிய சாதனை படைத்தார். அதற்கடுத்ததாக 1990 ஆம் ஆண்டு அர்ஜென்டினா அணியை உலகக்கோப்பை இறுதிப் போட்டி வரை எடுத்து சென்றார்.

அந்த அணிக்கு மட்டுமல்லாது தான் விளையாடிய கிளப் அணிகளுக்கும் பல பெருமைகளை சேர்த்த மரடோனா, கால்பந்து உலகின் ஜாம்பவான்களில் ஒருவராக திகழ்ந்து வந்தார்.

60 வயதான இவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மூளையில் ஏற்பட்ட இரத்த கசிவு அறுவை சிகிச்சை மூலம் சரி செய்து வீடு திரும்பினார். துரதிஷ்டவசமாக நேற்று இரவு திடீரென மாரடைப்பால் உயிரிழந்திருக்கிறார். இந்த செய்தியை கேட்டவுடன் முன்னாள் மற்றும் தற்போதைய கால்பந்து வீரர்கள் அனைவரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். அதே நேரம் தங்களது இரங்கல் செய்திகளையும் தெரிவித்து வருகின்றனர்.

இந்தியாவில் கால்பந்து விளையாட்டு பெரிதளவில் வேரூன்றி இல்லாத பொழுதும் மரடோனாவின் மரணச்செய்தி பலரை பாதித்திருக்கிறது. குறிப்பாக பிசிசிஐ தலைவர் கங்குலியை அதிகளவில் பாதித்திருக்கிறது. அவரது இறப்பிற்கு

மிகவும் வருத்தத்துடன் இரங்கல் செய்தி தெரிவித்துள்ள கங்குலி கூறுகையில்,

“எனது நாயகன் இனி வரமாட்டார். கால்பந்து உலகின் புத்திசாலியான மரடோனவை நாம் இழந்தது மிகவும் வருத்தமளிக்கிறது. இவர் ஒருவருக்காக மட்டுமே நான் கால்பந்து விளையாட்டை கண்டு களித்தேன்.” என பதிவிட்டிருந்தார்.

அதேநேரம் மரடோனாவின் இழப்பிற்கு ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரும் தனது இரங்கலை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

மரடோனா அர்ஜென்டினா நாட்டிற்காக 90 போட்டிகளில் விளையாடி 34 கோல்கள் அடித்திருக்கிறார். அதேபோல் சர்வதேச அரங்கில் ஐநூறுக்கும் மேற்பட்ட போட்டிகளில் விளையாடிய மரடோனா 300-க்கும் மேற்பட்ட கோல்கள் அடித்திருக்கிறார்.

இவர் நான் நாபோலி, பார்சிலோனா, சாவில்லா என பெரிய கிளப் அணிகளுக்காக விளையாடி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *