சச்சினை போன்று பாஸ்கிதான் அணியில் அறிமுகம் ஆகும் இளம் வீரர்! 1

பாகிஸ்தானைச் சேர்ந்த நசீம் ஷா என்ற 16 வயது இளம் வேகப்பந்து வீச்சாளர் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகி உள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, பிரிஸ்பேனில் நடைபெற்று வருகிறது. இதில் பாகிஸ்தான் அணியின் அறிமுக வீரராக, 16 வயதே ஆன நசீம் ஷா களமிறங்கி உள்ளார். இவர் மணிக்கு 145 கிமீ வேகத்தில் பந்து வீசக்கூடியவர்.

டெஸ்ட் போட்டியில் அறிமுகமான அவருக்கு டெஸ்ட் போட்டிக்கான தொப்பியை பயிற்சியாளர் வாக்கார் யூனுஸ் அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.சச்சினை போன்று பாஸ்கிதான் அணியில் அறிமுகம் ஆகும் இளம் வீரர்! 2

டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு முன்னதாக, கடந்த வாரம் ஆஸ்திரேலியாவில் நசீம் ஷா பயிற்சி ஆட்டத்தில் ஆடிக்கொண்டிருந்தபோது, அவரது தாயார் உடல்நலக்குறைவு காரணமாக இறந்துபோனார். ஆனால், இறுதிச்சடங்கிற்கு செல்லாமல் தாயார் ஆசைப்பட்டபடி தொடர்ந்து பயிற்சி ஆட்டத்தில் நசீம் விளையாடினார்.

மிக இளம் வயதில் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமான வீரர்களில் நசீம் ஷாவும் ஒருவர். ஒருசில வீரர்கள் மட்டுமே 16 வயதில் அறிமுகமாகி உள்ளனர். இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் 16 வயதில் டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகி, பின்னாளில் உலகமே உற்றுநோக்கும் கிரிக்கெட் ஜாம்பவானாக உருவெடுத்தார். பாகிஸ்தானைச் சேர்ந்த ஹசன் ரசா, தனது 14வது வயதில் டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

நசீம் ஷாவின் தாய் 10 நாள்களுக்கு முன்பு காலமானாா். இருப்பினும், மனதளவில் அவா் திடமாக இருக்கிறாா் என்கிற நம்பிக்கையுடன் அவரைத் தேர்வு செய்துள்ளது பாகிஸ்தான் அணி.

சச்சினை போன்று பாஸ்கிதான் அணியில் அறிமுகம் ஆகும் இளம் வீரர்! 3
Shah started playing gully cricket, appeared in U-16 regional trials where he claimed 32 wickets in 8 matches and subsequently cemented his place in Pakistan U-16 team

தாய் இறந்ததற்கு அஞ்சலி செலுத்துவதற்குக் கூட நேரில் செல்ல முடியாத நிலைமையில் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு இன்று அறிமுகமாகியுள்ளார் நசீம் ஷா. தாய் இறந்த பிறகு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் தர பயிற்சி ஆட்டத்தில் விளையாடினார். சோகம் காரணமாக முதல் இன்னிங்ஸில் அவர் பந்துவீசவில்லை.  2-வது இன்னிங்ஸில் வீசிய 8 ஓவர்களிலேயே ஒரு விக்கெட் எடுத்துக் கவனம் ஈர்த்தார். இந்த இளம் புயல் சர்வதேச கிரிக்கெட்டில் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எண்ண வைத்தார்.

நசீம் ஷா இதுவரை ஏழு முதல் தர கிரிக்கெட் ஆட்டங்களில் மட்டுமே விளையாடியுள்ளார். இன்று டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அறிமுகமானது மூலம் ஆஸ்திரேலியாவிலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் டெஸ்ட் ஆட்டத்தில் விளையாடிய இளம் வீரர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *