இந்த ஒரு விசயத்த நான் கோஹ்லி கிட்ட கேட்டே ஆகனும்; கங்குலி !! 1
இந்த ஒரு விசயத்த நான் கோஹ்லி கிட்ட கேட்டே ஆகனும்; கங்குலி

ஒவ்வொரு விக்கெட் வீழும் போதும் கோஹ்லி செய்யும் ஆக்ரோஷமான சேட்டைகளை அவர் யாரிடம் இருந்து கற்றுக்கொண்டார் என்ற விசயத்தை நான் கோஹ்லியிடமே தெரிந்து கொள்ள உள்ளதாக கங்குலி தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான தோனி தானாக முனந்து தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட கோஹ்லி, இந்திய அணியை தொடர்ந்து வெற்றிப்பாதையில் வழிநடத்தி  வருகிறார்.

இந்த ஒரு விசயத்த நான் கோஹ்லி கிட்ட கேட்டே ஆகனும்; கங்குலி !! 2

அசைக்க முடியாத முழு பலம் பொருந்திய அணியாக இந்திய அணியை கோஹ்லி வழிநடத்தி வருவதோடு, தனது தனிப்பட்ட பேட்டிங்கிலும் அதிக கவனம் செலுத்தி ஒவ்வொரு போட்டியிலும் சாதனைகளை அடுக்கி வருகிறார்.

கோஹ்லி என்ன தான் இந்திய அணியை கம்பீரமாக வழிநடத்தி வந்தாலும், மைதானத்தில் அவரது ஆக்ரோஷமான நடவடிக்கைகள் சிலருக்கு பிடித்தாலும், பலருக்கு எரிச்சலை ஏற்படுத்தி வருகின்றன. முன்னாள் வீரர்கள், ஜாம்பவான்கள் என பலர் கோஹ்லி தனது ஆக்ரோஷத்தை குறைத்து கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறி வருகின்றனர்.

இந்த ஒரு விசயத்த நான் கோஹ்லி கிட்ட கேட்டே ஆகனும்; கங்குலி !! 3
India batsman and captain Virat Kohli celebrates after scoring a century during the sixth One Day International cricket match between South Africa and India at the Super Sport Park in Centurion on February 16, 2018. / AFP PHOTO / MARCO LONGARI (Photo credit should read MARCO LONGARI/AFP/Getty Images)

இந்நிலையில் இது குறித்து பேசிய இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி, ஒவ்வொரு விக்கெட் வீழும் போது ஆக்ரோஷமாக தனது முழங்காலை காட்டும் பழக்கத்தை கோஹ்லி யாரிடம் இருந்து கற்றுக்கொண்டார் என்பதை நான் கோஹ்லியிடம் கேட்டு தெரிந்து கொள்ள உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

இந்த ஒரு விசயத்த நான் கோஹ்லி கிட்ட கேட்டே ஆகனும்; கங்குலி !! 4

இது குறித்து கங்குலி கூறியதாவது “ஒவ்வொரு விக்கெட் வீழும் போது ஆக்ரோஷமாக தனது முழங்காலை காட்டும் பழக்கத்தை முதலில் யார் செய்தது, கோஹ்லி யாரை பார்த்து இதனை கற்றுக்கொண்டார் என்பதை நான் அவரிடமே கேட்டு தெரிந்து கொள்ள முடிவு செய்துள்ளேன். ஆனால் இந்திய அணியை கோஹ்லி அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வார் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *