இந்தியா-நியூசிலாந்து இடையேயான முதல் டி20 போட்டியுடன் தனது அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றார் அனுபவ வீரர் ஆசிஷ் நெஹ்ரா. 38 வயதான நெஹ்ரா இனி எந்த வகையிலான கிரிக்கெட் போட்டிகளிலும்ம் விளையாட மாட்டார்.Indian bowler Ashish Nehra

1999ல் அசாருதின் தலைமையிலான இந்திய அணியில் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார் ஆசிஷ் நெஹ்ரா. இதுவரை இந்திய அணிக்காக 17 டெஸ்ட் போட்டிகளிலும் 120 ஒருநாள் போட்டி மற்றும் 27 சர்வதேச டி20 போட்டி மற்றும் 88 ஐ.பி.எல் போட்டிகளிலும் ஆடியுள்ளார்.

நேற்றை போட்டியுடன் ஓய்வு பெற்ற நெஹ்ரா, போட்டிக்குப் பின் தனது பல்வேறு கிரிக்கெட் அனுபவங்களைப் பற்றி பேசினார்.

“தற்போதிலிருந்து இவை அனைத்தையும் நான் நினைவில் வைத்திருப்பேன். எவ்வளவு காலம் விலையாடினோம் என்பதில் இல்லை, விளையாடிய போது எவ்வளவு நினைவுகளை சேரத்துள்ளோம் என்பதில் தான் இருக்கிறது. எவ்வளவு சிறப்பாக ஆடினாலும், இந்திய மக்கள் நம்மால் எவ்வளவு நினைவுகளை கொடுத்துள்ளோம் எனபதை தார் பார்ப்பார்கள்.

ஒன்று மிச்சம், என்னுடைய உடம்பிற்கு தற்போது அமைதி கிடைக்கும், தற்போது அது அமைதியாக உறங்கும். முன்னர் கூறியது போல் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு ஆட முடியும், ஆனால், சரியான நேரத்தில் விலகி இளைஞர்களுக்கு வழிவிடுவதே சரியானது. அந்த சரியான தருணம் இது தான்.

கடைசி ஓவர் வீசியதை பற்றி:

இந்திய அணிக்கு கடைசி ஒவர்கள் வீசிய பந்து வீச்சாளர் நான் தான் என நினைக்கிறேன். ஆனால் 10 அல்லது 15 வருடங்களுக்கு முன்னர் இருந்து கிரிக்கெட் தற்போது வித்யாசப்படுகிறது. நான் விளையாட ஆரம்பித்ததில் இருந்து தற்போது வரை கிரிக்கெட் நிறைய மாறியுள்ளது.

தனது முதல் கிரிக்கெட் போட்டியைப் பற்றி நெஹ்ரா :

1997ஆம் ஆண்டு இங்கு தான் நான் எனது முதல் போட்டிடில் கிரிக்கெட் விளையாடத் துவங்கினேன். தற்போது விதிகள் நிறைய மாறிவிட்டது. வெகுவாக ரன் அடிக்கப்படுகிறது.

இந்திய அணியின் எதிர்காலத்தைப் பற்றி :

இந்திய அணியைத் தாங்க வீரர்கள் உள்ளனர்.  இந்த அணி ஒரு சிறந்த அணி. இன்னும் 7 அல்லது 9 ஆண்டுகளுக்கு இந்திய அணி மிகச்சிறப்பாக் இவர்களால் செயல்படும். இந்திய கிரிக்கெட் சரியான வீரர்களின் கையில் உள்ளது.

அவர் இது வரை விளையாடிய கேப்டன்கள் பற்றி :

நான் அதிக கேப்டன்களின் கீழ் விளையாடியுள்ளனர். தற்போது வரை அந்த கிரிக்கெட் பயனம் அற்புதமாக இருந்தது. கங்குலி, தோனி தற்போது கோலி என அனைவரும் அற்புதமான வீரர்கள். தலைமுறைக்கு தலைமுறை கிரிக்கெட் வீரர்கள் மாறுவார்கள். எல்லோரும் சிறந்த வீரர்கள். தலைமுறை வீரர்களை ஒப்பிட்டு அதில் யார் சிறந்த வீரர் என கூற இயலாது.

DURBAN – FEBRUARY 26: Ashish Nehra of India celebrates the wicket of Alec Stewart of England during the ICC Cricket World Cup 2003, Pool A match between England and India held on February 26, 2003 at Kingsmead in Durban, South Africa. India won the match by 82 runs. (Photo by Tom Shaw/Getty Images)
கடைசியாக் டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது பற்றி :

ஒரு பந்து வீச்சாளராக சரியான பந்துகளில் விக்கெட் விழும் சில நேரங்களில் ரன் அதியகமாக கொடுக்க நேரிடும். ஒரு கிரிக்கெட் வீரராக ஒரு நிமிடம் கண்ணாடி முன் நின்று பார்த்தால் நான் சரியாக அடுத்து என்ன செய்ய வேண்டும் எனத் தெரியும். எனது கடைசி டெஸ்ட் போட்டியில் 2004ஆம் ஆண்டு விளையாடினேன். அப்போது எனக்கு வயது 24 அல்லது 25 வயது இருக்கும். இருந்தும் அதற்கு அடுத்து 10 ஆண்டுகளுமக்கு மேல் ஆடி விட்டனர். 2009ல் தோனி தலைமையிலான இந்திய அணியில் டெஸ்ட் போட்டியில் விளையாட அழைகப்படேன் ஆனால் எனது காயம் காரணமாக விளையாட இயலவில்லை.

India’s Ashish Nehra, center, celebrates the wicket of New Zealand’s Adam Milne Colin Munro during the ICC World Twenty20 2016 cricket match at the Vidarbha Cricket Association stadium in Nagpur, India,Tuesday, March 15, 2016. (AP Photo/Saurabh Das)
ஓய்வு பற்றி :

தற்போது நான் சரியான தருணத்தில் ஓய்வு பெற்றுள்ளேன். தற்போது வரை எந்த ஒரு வருத்தமும் கிடையாது. இதற்கு மேல் நான் எதனையு, எதிர்பார்க்க இயலாது. மகிழ்ச்சியாக ஓய்வு பெறுகிறேன்.

எனக் கூறி தனது ஓய்வினை அறிவித்தார் நெஹ்ரா. • SHARE

  விவரம் காண

  நாங்கள் இருக்கும்வரை இனி இளம் வீரர்களுக்கு அணியில் இடம் கிடையாது: ஓப்பனாக பேசும் உமேஷ் யாதவ்

  இந்தியாவில் கிரிக்கெட் திறமைகளுக்குப் பஞ்சமில்லை, ஆனால் இளம் வீரர்கள் இந்திய அணிக்குள் நுழைய வேண்டுமென்றால் ஏற்கெனவே ஆடிக்கொண்டிருப்பவர்களை விட திறமையானவர்களாக இருந்தால்தான் முடியும்...

  இந்த தொடரின் வெற்றிக்கு இவர்தான் காரணம்: உமேஷ் யாதவ் பேட்டி

  Virat Kohli (captain) of India and Umesh Yadav of India celebrates the wicket of Vernon Philander of South Africa during day 4 of the second test match between India and South Africa held at the Maharashtra Cricket Association Stadium in Pune, India on the 13th October 2019 Photo by Deepak Malik / SPORTZPICS for BCCI
  சிறப்பான கேட்ச்களை பிடித்த விக்கெட் கீப்பா் ரித்திமான் சாஹாவுக்கு வேகப்பந்து வீச்சாளா் உமேஷ் யாதவ் பாராட்டு தெரிவித்துள்ளாா். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்டில் இந்தியா...

  பிசிசிஐ தலைவரானதும் ஐபிஎல்க்கு முன்னுரிமை கிடையாது, இதற்குத்தான் முன்னுரிமை: சவுரவ் கங்குலி அசத்தல் பேட்டி

  நீதிபதி லோதா குழு பரிந்துரைகளை அமுல்படுத்த ஏதுவாக உச்சநீதிமன்ற உத்தரவின்படி வினோத் ராய் தலைமையில் 3 நபர்கள் கொண்ட கிரிக்கெட் நிர்வாகக் குழுவை...

  ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியல் வெளியீடு: இந்திய மரணம் மாஸ்!

  தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக தொடரை கைப்பற்றியதன் மூலம் இந்திய அணி 200 புள்ளிகளுடன் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் முதல் இடத்தில் உள்ளது. தென்ஆப்பிரிக்காவுக்கு...

  இந்த 3 பேர் இருந்திருந்தால் வெற்றி பெற்று இருப்போம்: டு ப்லெஸிஸ் ஆதங்கம்

  ஸ்டெயின், டி வில்லியர்ஸ், அம்லா போன்ற வீரர்களின் இடத்தை ஒரே இரவில் நிரப்ப முடியாது என தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டூ பிளசிஸ்...