புஜாராவை புகழ்ந்து தள்ளிய ஆஸ்திரேலிய பயிற்சியாளர்

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவரும் இந்திய அணி, இந்த சுற்றுப்பயணத்தில்தான் ஆஸ்திரேலிய மண்ணில் முதன்முறையாக டெஸ்ட் தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்தது. இதற்கு முன்னதாக இந்திய அணி, ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றதேயில்லை.

ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி முதன்முறையாக டெஸ்ட் தொடரை வென்று வரலாற்று சாதனை படைப்பதற்கு முக்கிய காரணமாக திகழ்ந்த புஜாராவை ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் புகழ்ந்து பேசியுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவரும் இந்திய அணி, இந்த சுற்றுப்பயணத்தில்தான் ஆஸ்திரேலிய மண்ணில் முதன்முறையாக டெஸ்ட் தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்தது. இதற்கு முன்னதாக இந்திய அணி, ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றதேயில்லை. இந்த வரலாற்று சாதனைக்கு மிக முக்கிய காரணம் டெஸ்ட் அணியின் நட்சத்திர வீரர் புஜாரா.

இரு அணிகளுக்கும் இடையேயான பெரிய வித்தியாசமாக புஜாரா இருந்திருக்கிறார். ஆஸ்திரேலிய தொடரில் 4 சதங்கள் அடிக்கப்பட்டன. அவற்றில் 3 சதங்கள் புஜாரா அடித்தவை, ஒரு சதம் மட்டும் கோலி அடித்தார். ஒரு பேட்ஸ்மேன் சதமடிப்பது முக்கியமல்ல, அந்த சதம் அணியின் வெற்றிக்கு பயன்பட்டிருக்கிறதா என்பதில் தான் அந்த சதத்துக்கான மதிப்பு உள்ளது.

புஜாரா மந்தமாக ஆடுவதாக விமர்சனங்கள் இருந்தாலும், டெஸ்ட் போட்டியை பொறுத்தமட்டில் அவரது ஆட்டம் சரியானதுதான். புஜாரா மணிக்கணக்காக சளிப்பே இல்லாமல் பேட்டிங் ஆடக்கூடியவர். சிட்னி போட்டியின் முதல் இன்னிங்ஸில் 9 மணி நேரத்திற்கும் அதிகமாக பேட்டிங் ஆடினார்.

புஜாராவின் நிதானமான ஆட்டத்தை கண்டு வியப்படைந்த ஆஸ்திரேலிய ஸ்பின்னர் நாதன் லயன், புஜாராவிடம் இன்னும் உங்களுக்கு போர் அடிக்கவில்லையா என்று வெளிப்படையாகவே கேட்டார். அந்தளவிற்கு பவுலர்களை சோதித்துவிடுவார். புஜாராவின் தெளிவான மற்றும் நிதானமான மனநிலையும், சிதறாத கவனமும் அவரது பேட்டிங்கிற்கு வலுசேர்க்கின்றன.

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரை வென்று வெற்றி நாயகனாக வலம்வருகிறார் புஜாரா. தங்களுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி வெல்வதற்கு காரணமாக இருந்த புஜாராவை ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் புகழ்ந்துள்ளார். புஜாரா குறித்து பேசிய ஜஸ்டின் லாங்கர், ஒவ்வொரு பந்தையும் நன்கு கவனித்து கவனமாக ஆடுவதில் புஜாராவை போன்ற ஒரு பேட்ஸ்மேனை நான் பார்த்ததேயில்லை. சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட் கூட இப்படி ஆடியதில்லை. புஜாராவின் கவனக்குவிப்புதான் எங்கள் அணிக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது என்று லாங்கர் பாராட்டியுள்ளார். • SHARE

  விவரம் காண

  இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் உலகக்கோப்பை வெல்ல வாய்ப்புகள் அதிகம்: ரவி சாஸ்திரி

  இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் உலகக்கோப்பை வெல்ல வாய்ப்புகள் அதிகம் என இந்திய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார். இங்கிலாந்தில் இருந்து வெளியாகும் ‘டெய்லி...

  தோனியை புகழ்ந்து தள்ளிய மைக்கெல் கிளார்க் !!

  தோனியை புகழ்ந்து தள்ளிய மைக்கெல் கிளார்க் தனக்கு பாண்டிங் எப்படியோ அப்படித்தான் இந்திய அணியின் கேப்டன் கோலிக்கு தோனியின் ஆலோசனை தேவை என்று ஆஸ்திரேலிய...

  பந்தை நீங்களே வாங்கிக்கங்க; மைதானத்தில் தோனி கல கல !!

  பந்தை நீங்களே வாங்கிக்கங்க; மைதானத்தில் தோனி கல கல மெல்போர்னில் நடந்த கடைசி ஒருநாள் போட்டியில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்று இந்திய...

  தோனியை பாராட்டிய பிராக் லெஸ்னரின் மேனேஜர்!!

  Eat..Sleep.. Conquer..Repeat என்னும் பிராக் லெஸ்னரின் கோட்பாடுகளை போலவே தோனி Eat..Sleep.. Finsih Game..Repeat  செய்கிறார் என அவரின் மேனேஜர் ஐசிசி கிரிக்கெட்...

  உலகக்கோப்பையில் இந்திய அனியின் நெ.4ல் தோனி ஆடவேண்டும்: சவுரவ் கங்குலி

  உலகக்கோப்பையில் இந்திய அனியின் நெ.4ல் தோனி ஆடவேண்டும் என சவுரவ் கங்குலி கூறியுள்ளார். 3 மாதங்களுக்குப் பிறகு லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக வந்த தோனி...