தோனி இந்திய அணிக்கு மிக முக்கியமானவர்; மைக்கெல் கிளார்க் சொல்கிறார்

இந்திய அணிக்கு தோனி மிகவும் முக்கியமான வீரர் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கெல் கிளார்க் தெரிவித்துள்ளார்.

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் முக்கிய கிரிக்கெட் திருவிழாவான ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகளுக்காக கிரிக்கெட் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.  இந்தத் தொடர் இங்கிலாந்து நாட்டில் வரும் மே மாதம் 30 ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதற்காக பல்வேறு கிரிக்கெட் அணிகள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

இந்திய கிரிக்கெட் அணியும் அதற்கு ஆயத்தமாகும் வகையில் ஆஸ்திரேலியாவுடன் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இந்த தொடரை ஆஸ்திரேலியா அணி கைப்பற்றியது. குறிப்பாக கடைசி இரண்டு போட்டிகளில் இந்தியா தோல்வி அடைய அணியில் தோனி இல்லாததே காரணம் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தோனி குறித்து கருத்து தெரிவித்த ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்ன், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி விளையாடுவது குறித்து விமர்சனம் செய்பவர்கள் ‘தான் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் பிதற்றுபவர்கள் ‘என கூறியுள்ளார்.

மேலும் தெரிவித்துள்ள அவர், ஆட்டத்தில் நி‌லைமை மோசமாக செல்லும் போது தோனி போன்ற ஒரு அனுபவ வீரர் அணி‌யில் இருப்பது அவசியம். தோனியின் அனுபவமும், ஆட்டத்தை சரியாக கணிக்கும் அவருடைய தலைமை அனுபவங்களும் உலகக் கோப்பை போட்டியின் போது இந்தியாவுக்கு முக்கியமானது என்று தெரிவித்துள்ளார். மேலும் உலகக் கோப்பை பொறுத்தவரையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு நல்ல வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார்.

முன்னதாக உலக கோப்பை கிரிக்கெட் குறித்து கருத்து தெரிவித்திருந்த சுனில் கவாஸ்கர் , வாழ்வா சாவா என்ற நேரங்களில் தோனியின் ஆலோசனை மிகப்பெரிய பலமாக இருக்கிறது. தோனிக்கும், கோலிக்கும் இடையே நல்லதொரு புரிதல் இருக்கிறது. இந்த புரிதலுடன் இவர்கள் இருப்பது உலகக்கோப்பையை வெல்ல உதவியாக இருக்கும் என்று தெரிவித்திருந்தார்.

இதே போல் இந்திய அணியில் தோனியின் தேவை குறித்து பேசிய ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கெல் கிளார்க், ”இந்திய அணியில் தோனியின் தேவையை குறைத்து மதிப்பிட்டு விட கூடாது, இந்திய அணியின் மிடில் ஆர்டரில் அவர் மிகவும் முக்கியமானவர்” என்றார்.

  • SHARE

  விவரம் காண

  மிகப்பெரும் நம்பிக்கையே தல தோனி தான்; ரவி சாஸ்திரி புகழாரம் !!

  மிகப்பெரும் நம்பிக்கையே தல தோனி தான்; ரவி சாஸ்திரி புகழாரம்  உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தோனியின் பங்கு இந்திய அணியில் மிக முக்கியமானதாக இருக்கும்...

  உலக கோப்பையில் மாஸ் காட்ட இதை செய்யுங்கள்; ஆஃப்கானிஸ்தான் அணிக்கு அட்வைஸ் கொடுக்கும் கும்ப்ளே !!

  உலக கோப்பையில் மாஸ் காட்ட இதை செய்யுங்கள்; ஆஃப்கானிஸ்தான் அணிக்கு அட்வைஸ் கொடுக்கும் கும்ப்ளே உலக கோப்பை நெருங்கிய நிலையில், இந்தியா மற்றும் இங்கிலாந்து...

  சச்சின் டெண்டுல்கரை விட விராட் கோஹ்லி தான் பெஸ்ட்; முன்னாள் வீரர் ஓபன் டாக் !!

  சச்சின் டெண்டுல்கரை விட விராட் கோஹ்லி தான் பெஸ்ட்; முன்னாள் வீரர் ஓபன் டாக் கிரிக்கெட் உலகின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை விட...

  இந்திய அணியின் இரண்டு நம்பிக்கை தூண்கள் இவர்கள் தான்; கோஹ்லி பாராட்டு !!

  இந்திய அணியின் இரண்டு நம்பிக்கை தூண்கள் இவர்கள் தான்; கோஹ்லி பாராட்டு யுஸ்வேந்திர சாஹல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகிய இருவர் இந்திய அணியின்...

  உலகக்கோப்பை ஆஸ்திரேலிய அணிக்கு தான்; அடித்து சொல்லும் ஆடம் கில்கிறிஸ்ட் !!

  உலகக்கோப்பை ஆஸ்திரேலிய அணிக்கு தான்; அடித்து சொல்லும் ஆடம் கில்கிறிஸ்ட் உலகக்கோப்பையை ஆஸ்திரேலிய அணி வெல்வதற்கே அதிக வாய்ப்புகள் உள்ளது என ஆஸ்திரேலிய அணியின்...