வங்காளதேச டெஸ்ட் தொடரை முடித்துக் கொண்டு அங்கிருந்து இந்தியாவுக்கு வருகை தரும் ஸ்டீவன் சுமித் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. இந்தியா-ஆஸ்திரேலியா
இந்த தொடருக்கான இடங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் தேதி முடிவு ஆகாமல் இருந்தது.
இதன்படி இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் வருகிற 17-ந்தேதி பகல்-இரவு ஆட்டமாக நடைபெறுகிறது.
ஒரு நாள் போட்டிகள்
- சென்னை (செப்.17)
- கொல்கத்தா (செப்.21),
- இந்தூர் (செப்.24),
- பெங்களூரு (செப்.28),
- நாக்பூர் (அக்டோபர் 1) ஆகிய இடங்களில் நடக்கிறது
- அதைத் தொடர்ந்து இவ்விரு அணிகள் இடையிலான மூன்று 20 ஓவர் போட்டிகள் முறையே
- ராஞ்சி (அக்.7),
- கவுகாத்தி (அக்.10),
- ஐதராபாத் (அக்.13) ஆகிய நகரங்களில் நடத்தப்படுகிறது.ஆஸ்திரேலிய அணி வருகிற 8 மற்றும் 9-ந்தேதிகளில் இரு பிரிவாக சென்னையை வந்தடைகிறார்கள்.
ஒரு நாள் தொடருக்கு முன்பாக பயிற்சி கிரிக்கெட்டில் விளையாடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவுடனான பயிற்சி ஆட்ட அணி அறிவிப்பு
இந்த மாத இறுதியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் ஒருநாள் மற்றும் டி20 தொடரில் இந்தியாவில் விளையாடவுள்ளன. அதற்க்கு முன்னர் ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் பயிற்சி ஆட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளது.ஆஸ்திரேலியாவுடனான
இதற்க்கான, 14 பேர் கொண்ட போர்ட் பிரெசிடென்ட்ஸ் அணி அற்விக்கப்பட்டுள்ளது. அந்த அணியில் இளம் வீரர்களும் சமீபத்தில் உள்ளூர் போட்டிகளி அசத்திய வீரர்களும் இடம் பிடித்துள்ளர்.