லோகோ மற்றும் பெயரை மாற்றிய ''ஈ சாலா'' ! வெளியான 3வது புதிய  லோகோ! 1

ஒரு மாற்றத்துக்காக தனது லோகோவை மாற்றியுள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி.

விராட் கோலி, டிவில்லியர்ஸ் ஆகிய தலைசிறந்த வீரர்கள் அணியில் இருந்தும் கூட, அந்த அணியின் தவறான அணுகுமுறையால் இதுவரை கோப்பையை வெல்ல முடியவில்லை. எனவே வரும் சீசனில் முதல் முறையாக ஐபிஎல் டைட்டிலை வெல்லும் முனைப்பில் ஆர்சிபி உள்ளது.

லோகோ மற்றும் பெயரை மாற்றிய ''ஈ சாலா'' ! வெளியான 3வது புதிய  லோகோ! 2

இதற்கிடையே, திடீரென ஆர்சிபி அணி, கேப்டன் கோலிக்குக்கூட தெரியாமல், அந்த அணியின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்களில் இருந்து ப்ரொஃபைல் படங்கள், லோகோ, பதிவுகள் ஆகியவற்றை நீக்கியது. இதைக்கண்டு கேப்டன் கோலி உட்பட டிவில்லியர்ஸ், சாஹல் ஆகிய வீரர்களும் அதிர்ச்சியடைந்தனர்.

ஐந்து முறை பிளே ஆஃப்புக்குத் தகுதி பெற்றும் மூன்று முறை இறுதிச்சுற்றில் விளையாடியும் பிரபல வீரர்களைக் கொண்டிருந்தும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியால் (ஆர்சிபி) இதுவரை ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை வெல்லமுடியவில்லை. 2018-ல் 6-ம் இடம், 2017, 2019 ஆண்டுகளில் கடைசி இடம் எனக் கடந்த மூன்று வருடங்களாக மிக மோசமாகவே விளையாடி வருகிறது. இதையடுத்து, அந்த அணியின் பேட்டிங் பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன், பந்துவீச்சுப் பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ரா ஆகியோர் நீக்கப்பட்டார்கள். அதற்குப் பதிலாக தலைமைப் பயிற்சியாளராக சைமன் கடிச்சும் அணி இயக்குநராக மைக் ஹெஸ்ஸனும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.

இந்த வருட ஐபிஎல் போட்டியையாவது வெல்வோமா என்கிற ஆர்சிபி ரசிகர்களின் ஏக்கத்தைப் போக்க ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது ஆர்சிபி அணி.

அதன்படி, லோகோவின் வடிவத்தை மாற்றியுள்ளார்கள். இந்தப் புதிய லோகோ அணிக்கு ராசியாக அமையும் என நம்புகிறது ஆர்சிபி அணி.

 

 

 

லோகோ மற்றும் பெயரை மாற்றிய ''ஈ சாலா'' ! வெளியான 3வது புதிய  லோகோ! 3

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் தொடர் இம்முறை ஆல் ஸ்டார் போட்டி, மற்றும் பல அப்டேட்டுகளுடன் வரும் மார்ச் 29இல் துவங்கவுள்ளது. இந்தியாவில் ஆண்டுதோறும் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இந்த ஆண்டுக்கான 13ஆவது சீசன் தொடருக்கான ஏற்பாடுகள் தீவிரமாக தயாராகி வருகிறது. இந்நிலையில் (ஐபிஎல்) நிர்வக கவுன்சில் கூட்டம் சமீபத்தில் புதுடெல்லியில் நடந்தது.

இந்த கூட்டத்தில் போட்டிகளை வழக்கம் போல 8 மணிக்கு தான் துவங்கப்படும் என முடிவு எடுக்கப்பட்டது. ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 29இல் துவங்கி மே 24 வரை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தவிர, ஃபைனல் போட்டி மும்பையில் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *