Cricket, New Zealand, West Indies, Tom Latham, Kane Williamson

ஆஸ்திரேலியத் தொடருக்குப் பின் நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டியில் விளையாடவுள்ளது.

இதற்க்கான நியூசிலாந்து அணியின் ஒரு பகுதி வீரர்களை நியூலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. 15 பேர் கொண்ட அணியில் 9 பேரை மட்டும் அறிவித்துள்ளது நியூசிலானது கிரிக்கெட் வாரியம்.

அந்த அணி விவரம் வருமாறு,

மார்டின் கப்டில், டாம் லேதம் (விக்கெட் கீப்பர்), கேன் ரிச்சர்ட்சன், ராஸ் டெய்லர், கோலின் டி க்ராந்தோம், மிட்செல் சான்ட்னர், டிம் சௌத்தி, ஆடம் மிலின், ட்ரெண்ட் போல்ட்.

இந்த தொடர் அக்டோபர் 22ஆம் தேதி மும்பையில் முதல் ஒருநாள் போட்டியில் துவங்குகிறது.

வரும் செப்டம்பர் மற்றும் டிசம்பரில் மட்டும் இந்தியா 23 போட்டிகள் விளையாடவுள்ளது. அதில் டெஸ்ட் ,ஒரு நாள் ,டி20 ஆகிய அனைத்து விதமான போட்டிகளும் அடங்கும்.

கேப்டன் விராத் கோலிஇந்திய பத்திரிக்கை அமைப்பிற்க்கு பிசிசியை வெளியிட்டுள்ள அறிக்கையில் , அதாவது இந்திய அணி செப்டம்பர் மற்றும் அக்டோபர் தொடக்கத்தில் ஆஸ்திரேலியவிற்க்கு எதிராக 5 ஒரு நாள், 3 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் செப்டம்பர் 17 ஆம் தேதி முதல் அக்டோபர் 11 ஆம் தேதி வரை சுற்றுப்ப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.

அதனை தொடர்ந்து நியூசிலாந்து அணியுடன் 3 ஒரு நாள் போட்டி மற்றும் 3 டி 20 போட்டிகளில் அக்டோபர் இறுதி மற்றும் நவம்பர் முதல் வாரம் விளையாடவுள்ளது. நியூசிலாந்து அணி இந்த போட்டிகளுக்காக இந்தியாவில் அக்டோபர் 22ஆம் தடி முதல் நவம்பர் 7 ஆம் தேதி  வரை சுற்றுப்ப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.

அதன்பின்பு இந்தியாவில் சுற்று பயணம் மேற்கொள்ளவுள்ள  இலங்கை அணி 3 டெஸ்ட் ,3 ஒரு நாள் மற்றும் 3 டி 20 போட்டிகளில் விளையாடவுள்ளது. அந்த மூன்று டெஸ்ட் போட்டிகளையும் முறையே கொல்கத்தா,டெல்லி,நாக்பூர் ஆகிய இடத்தில் நடைபெரும்.

இடையறாத அனுபந்தத்திற்க்கு இடையில் ஓய்வும் இந்தைய அணி வீரர்களுக்கு இல்லை. நம் மன்னில் நடைபெறும் அனைத்து போட்டிகளும் முடிந்தவுடன் இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுபயணம் மேற்கொள்ளவுள்ளது. அங்கு தென்னாப்பிரிக்கவிற்க்கு எதிறாக அனைத்து  விதமான போட்டிகளும் அடங்கிய ஒரு சில மாதங்கள் அடங்கிய போட்டிகளில் ஆடவுள்ளது. அந்த போட்டிகளுக்கான அட்டவணை இன்னும் வெளியிடபடவில்லை.

Cricket, Virat Kohli, Ravi Shastri, Virender Sehwag, India, BCCI

இன்னொரு செய்தியாக இந்திய கிரிக்கெட் வாரியம் தற்போது புதிதாக 2 கிரிக்கெட் விளயாட்டு மைதானங்களை அறிவித்துள்ளது. அந்த இரு மைதாங்களில் ஒன்றில் இந்திய அணி விளையாடவுள்ளது

  • கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் மைதானம்
  • அசாமில் உள்ள பஸ்பாரா மைதானம்

இவற்றில் எந்த மைதானத்தில் இந்திய அணி விளையாட போகிறது என்பதை இந்திய கிரிக்கெட் வாரியத்தின் போட்டி மற்றும் அட்டவணை குழு ஆகஸ்ட் மாதம் கொல்கத்தாவில் நடக்கும் சந்திப்பில் முடிவெடுக்கும்.

நம் நாட்டில் மட்டும் மொத்தம் 23 போட்டிகல் உள்ளது இந்தியாவிற்க்கு. அதில் 3 டெஸ்ட் போட்டிகளும் 11 ஒரு நாள் போட்டிகளும் 9 டி 20 போட்டிகளும் அடங்கும். இந்த முறை இருபது ஓவர் போட்டிகள் அதிகம்.

தற்போது புதிதாக அசாமில் உள்ள பரஸ்சாபர மைதானமும், கேரளாவில் திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன் ஃபீல்டு மைதானமும் டெஸ்ட் அந்தஸ்து பெற்றுள்ளன. இந்த இரு மைதானங்களும் டெஸ்ட் போட்டியை நடத்த ஆவலாக உள்ளன. இந்தியாவில் உள்ள மற்ற பெரிய மைதானங்கள் ஒரு நாள் மற்றும் டி 20 போட்டிகளை நடத்த திட்டமிட்டுள்ளன, என பிசிசிஐ தர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியத் தொடருக்கான நியூசிலாந்து அணியின் 9 பேர் அறிவிப்பு! 1
கிரீன் ஃபீல்டு மைதானம் ,திருவனந்தபுரம்

” கொச்சியின் நேரு மைதானம் வழிவழியாக ஒருநாள் போட்டிகளை நடத்தி வருகிறது, மேலும் அந்த மைதானம்  பிபா நடத்தும் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான கால்பந்து போட்டியையும் நடத்தும் வாய்ப்பையும் பெற்றுள்ளது. திருவனந்தபுரம் கிரீன் ஃபீல்டு மைதானம் தனது முதல் டெஸ்ட் போட்டியை கூடிய விரைவில் பெற்றுவிடும்.” மேலும் டெஸ்ட் போட்டிகளை நடத்த நாக்பூர் மைதானத்திற்க்கு விதிக்கப்பட்ட தடை நீக்கபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது அந்த மைதானமும்  சென்னை ,மும்பை,கொல்கத்தா,டெல்லி,பெங்கலுரு போன்ற மைதானங்களை போல புத்துணச்சியுடன் போட்டிகளை நடத்தும் .

இந்த 23 போட்டிகளை நடத்த  16ல் இருந்து 18 மைதானங்கள் வரை உபயோகபடுத்தப்படும். தற்போது இந்திய அணி இலங்கையில் டெஸ்ட் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் 304 ரங்கள் வித்யாசத்தில் வெற்றி பெற்று அடுத்த போட்டியிளும் வெற்றி பெரும் முனைப்புடன் கல்ம் இறங்குகிறது. இலங்கையும் முதல் டெஸ்ட் தோலிவியில் இருந்து மீண்டு இந்த போட்டியில் வெற்றி பெறும் நோக்கத்துடன் கலம் காணும்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *