காயம் காரணமாக விலகிய கே.எல் ராகுல்; மாற்று வீரரை உடனடியாக அறிவித்தது பிசிசிஐ !! 1

நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து இந்திய அணியின் துவக்க வீரரான கே.எல் ராகுல் காயம் காரணமாக விலகியுள்ளார்.

இந்தியா வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று டி.20 போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இதில் முதலில் நடைபெற்ற டி.20 தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றிய நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி 25ம் தேதி துவங்க உள்ளது.

காயம் காரணமாக விலகிய கே.எல் ராகுல்; மாற்று வீரரை உடனடியாக அறிவித்தது பிசிசிஐ !! 2

டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டியில் இந்திய அணி, நியூசிலாந்து அணியிடம் மிக மோசமான தோல்வியை சந்தித்ததால், இந்த தொடரில் இந்திய அணியின் விளையாட்டை பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்துள்ளனர்.

டெஸ்ட் தொடருக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வரும் நிலையில், இந்திய அணியின் மிக முக்கிய வீரரான கே.எல் ராகுல் காயம் காரணமாக நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காயம் காரணமாக விலகிய கே.எல் ராகுல்; மாற்று வீரரை உடனடியாக அறிவித்தது பிசிசிஐ !! 3

தசைப்பிறழ்ச்சி காரணமாக ராகுல் இந்த தொடரிலிருந்து விலகியுள்ளார். இந்த டெஸ்ட் தொடரில் ரோஹித் ஆடாததால், ராகுல் – மயன்க் அகர்வால் தொடக்க வீரர்களாக இறங்குவதாக இருந்தது. இந்நிலையில், ராகுல் காயம் காரணமாக இந்த தொடரிலிருந்து விலகியுள்ளார்.

காயம் காரணமாக விலகிய கே.எல் ராகுல்; மாற்று வீரரை உடனடியாக அறிவித்தது பிசிசிஐ !! 4

எனவே மயன்க் அகர்வாலுடன் ஷுப்மன் கில் தொடக்க வீரராக இறங்குவார். கோலி முதல் டெஸ்ட்டில் ஆடாததால், கில் 4ம் வரிசையில் ஆடியிருப்பார். ராகுலும் மயன்க்கும் தொடக்க வீரர்களாக ஆடியிருப்பார்கள். ஆனால் இப்போது ராகுல் விலகியதால் கில் தொடக்க வீரராக இறங்கியாக வேண்டும். எனவே ராகுலுக்கு மாற்று வீரராக சூர்யகுமார் யாதவ் இந்திய டெஸ்ட் அணியில் எடுக்கப்பட்டுள்ளார்.

டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி;

அஜிங்க்யா ரஹானே (கேப்டன்), புஜாரா, மயன்க் அகர்வால், ஷுப்மன் கில், ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ரிதிமான் சஹா (விக்கெட் கீப்பர்), கேஎஸ் பரத் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், அக்ஸர் படேல், ஜெயந்த் யாதவ், இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *