New Zealand's players celebrate bowling India's Ajinkya Rahane during day four of the first Test cricket match between New Zealand and India at the Basin Reserve in Wellington on February 24, 2020. (Photo by Marty MELVILLE / AFP) (Photo by MARTY MELVILLE/AFP via Getty Images)

JCC
ஒரு தொழில்முறை கிரிக்கெட் வீரராக மாறவேண்டுமா?
இங்கே ரெஜிஸ்டர் செய்யுங்கள்

*T&C Apply

நியூசிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 20 ஓவர் தொடரை 5-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஒரு நாள் தொடரை 0-3 என்ற கணக்கில் பறிகொடுத்தது. அடுத்ததாக இவ்விரு அணிகள் இடையே 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. இதில் வெலிங்டனில் நடந்த முதலாவது டெஸ்டில் நியூசிலாந்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா-நியூசிலாந்து இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கிறைஸ்ட்சர்ச்சில் உள்ள ஹாக்லே ஓவல் மைதானத்தில் நாளை (சனிக்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி இந்திய வீரர்கள் நேற்று பயிற்சியில் ஈடுபட்டனர்.

முதலாவது டெஸ்டில் இந்தியாவின் பேட்டிங் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. இரண்டு இன்னிங்சிலும் இந்தியா 200 ரன்களை கூட (165 மற்றும் 191 ரன்) தொடவில்லை. மயங்க் அகர்வால், துணை கேப்டன் அஜிங்யா ரஹானே ஆகியோர் மட்டுமே பேட்டிங்கில் குறிப்பிடத்தக்க அளவுக்கு ஆடினர். மற்றவர்கள் நியூசிலாந்தின் வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் மகுடிக்கு மயங்கும் பாம்பு போல் சரணாகதியானார்கள்.இந்திய அணியுடன் மல்லுக்கட்டப்போகும் நியுஸிலாந்து அண் இதுதான்! 1

இந்த ஆடுகளமும் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமானது தான். ஏற்கனவே டிரென்ட் பவுல்ட், டிம் சவுதி அச்சுறுத்திய நிலையில் ‘ஷாட்பிட்ச்’ மன்னன் நீல் வாக்னெரும் நியூசிலாந்து அணியுடன் இணைந்துள்ளார். இவர்களின் புயல்வேக தாக்குதலுக்கு இந்திய பேட்ஸ்மேன்கள் ஈடுகொடுத்து ஆடுவதை பொறுத்தே ஸ்கோரின் போக்கு அமையும்.

நியூசிலாந்து அணியை பொறுத்தவரை உள்ளூரில் தங்களது ஆதிக்கத்தை நீட்டிப்பதில் தீவிர முனைப்பு காட்டுகிறார்கள். இந்த மைதானத்தில் இதுவரை நடந்துள்ள 6 டெஸ்டுகளில் நியூசிலாந்து 4-ல் வெற்றியும், ஒன்றில் தோல்வியும், ஒன்றில் டிராவும் கண்டுள்ளது.

இந்திய அணியுடன் மல்லுக்கட்டப்போகும் நியுஸிலாந்து அண் இதுதான்! 2
WELLINGTON, NEW ZEALAND – FEBRUARY 23: Kyle Jamieson of New Zealand talks to his teammates while awaiting a thirst umpire decision during day three of the First Test match between New Zealand and India at Basin Reserve on February 23, 2020 in Wellington, New Zealand. (Photo by Hagen Hopkins/Getty Images)

இந்த மைதானத்தில் விக்கெட் வேட்டையில் டிரென்ட் பவுல்ட் (37 விக்கெட்), டிம் சவுதி (32 விக்கெட்), நீல் வாக்னெர் (23 விக்கெட்) ஆகியோர் உள்ளனர். இவர்களின் ஜாலம் நீடிக்குமா அல்லது இந்திய பேட்ஸ்மேன்கள் பதிலடி கொடுக்கும் வகையில் ஆடுவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.



  • SHARE
  • விவரம் காண

    இது மட்டும் நடந்துவிட்டால் ரோஹித் சர்மாவை யாரும் தடுக்க முடியாது; முன்னாள் வீரர் ஓபன் டாக் !!

    இது மட்டும் நடந்துவிட்டால் ரோஹித் சர்மாவை யாரும் தடுக்க முடியாது; முன்னாள் வீரர் ஓபன் டாக் முதல் 45 நிமிடங்கள் ரோஹித் சர்மா நிலைத்து...

    அந்த இந்திய வீரருக்கு நடந்தது மிகப்பெரும் அநியாயம்; முன்னாள் வீரர் ஆதங்கம் !!

    அந்த இந்திய வீரருக்கு நடந்தது மிகப்பெரும் அநியாயம்; முன்னாள் வீரர் ஆதங்கம் சீனியர் வீரர்களில் ஒருவரான ரஹானே இந்திய அணியில் இருந்து முழுவதுமாக புறக்கணிப்பட்டது...

    கேப்டன் பதவியில் நான் சொதப்பியதற்கு இவர் மட்டும் தான் காரணம்; கங்குலி அதிரடி பேச்சு !!

    கேப்டன் பதவியில் நான் சொதப்பியதற்கு இவர் மட்டும் தான் காரணம்; கங்குலி அதிரடி பேச்சு ஐ.பி.எல் தொடருக்கான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில், கவுதம்...

    இந்திய அணியின் அடுத்த சேவாக் இவர் தான்; முன்னாள் வீரர் அதிரடி கருத்து !!

    இந்திய அணியின் அடுத்த சேவாக் இவர் தான்; முன்னாள் வீரர் அதிரடி கருத்து இளம் வீரரான ப்ரிதீவ் ஷா, முன்னாள் வீரர் சேவாக்கை போன்று...

    ஐ.பி.எல் தொடர் வேண்டுமா..? வேண்டாமா..? வெளிப்படையாக பேசியுள்ளார் ஜாண்டி ரோட்ஸ் !!

    ஐ.பி.எல் தொடர் வேண்டுமா..? வேண்டாமா..? வெளிப்படையாக பேசியுள்ளார் ஜாண்டி ரோட்ஸ் ஐ.பி.எல் டி.20 தொடர் நடைபெறாமல் இந்த ஆண்டு நிறைவடைவதை தன்னால் நினைத்து கூட...