தமிழக வீரர் நீக்கம்... நியூசிலாந்து அணிக்கு புதிய கேப்டன்; முதலில் பேட்டிங் செய்கிறது நியூசிலாந்து அணி !! 1
தமிழக வீரர் நீக்கம்… நியூசிலாந்து அணிக்கு புதிய கேப்டன்; முதலில் பேட்டிங் செய்கிறது நியூசிலாந்து அணி

இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டி.20 போட்டியில் டாஸ் வென்றுள்ள நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, நியூசிலாந்து அணியுடன் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் போட்டி மழை காரணமாக முழுவதுமாக ரத்து செய்யப்பட்டது. இரண்டாவது போட்டியில் இந்திய அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலையில் இருக்கும் நிலையில், இரு அணிகள் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி.20 போட்டி இன்று நடைபெறுகிறது.

இந்திய அணி

நியூசிலாந்தின் நேபியர் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. காயம் காரணமாக கேன் வில்லியம்சன் மூன்றாவது போட்டியில் இருந்து விலகியுள்ளதால், டிம் சவுத்தி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மூன்றாவது போட்டிக்கான இந்திய அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வாசிங்டன் சுந்தர் அணியில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஹர்சல் பட்டேல் ஆடும் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார். இது தவிர அணியில் வேறு மாற்றங்கள் செய்யப்படவில்லை. தொடரை வெல்வதற்கு இது முக்கியமான போட்டி என்பதால் உம்ரன் மாலிக், சஞ்சு சாம்சன் போன்ற வீரர்களுக்கு இந்த போட்டியிலும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

தமிழக வீரர் நீக்கம்... நியூசிலாந்து அணிக்கு புதிய கேப்டன்; முதலில் பேட்டிங் செய்கிறது நியூசிலாந்து அணி !! 2

அதே போல் நியூசிலாந்து அணியின் ஆடும் லெவனில் கேன் வில்லியம்சனுக்கு பதிலாக மார்க் சாப்மன் சேர்க்கப்பட்டுள்ளார்.

நியூசிலாந்து அணியின் ஆடும் லெவன்;

பின் ஆலன், டீவன் கான்வே, மார்க் சாப்மன், கிளன் பிலிப்ஸ், டேரியல் மிட்செல், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சாட்னர், ஆடம் மில்னே, இஷ் சோதி, டிம் சவுத்தி, லோகி பெர்குசன்.

இந்திய அணியின் ஆடும் லெவன்;

இஷான் கிஷன், ரிஷப் பண்ட், சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயஸ் ஐயர், ஹர்திக் பாண்டியா, தீபக் ஹூடா, புவனேஷ்வர் குமார், ஹர்சல் பட்டேல், அர்ஸ்தீப் சிங், முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல்.

Leave a comment

Your email address will not be published.