ரிஷப் பண்ட்
இவரோட திறமை தெரியாம எல்லாரும் திட்டிட்டு இருக்கீங்க… ரிஷப் பண்ட்டிற்கு முன்னாள் வீரர் ஆதரவு

பேட்டிங் டெக்னிக் மோசமாக இருந்தாலும் இந்திய அணிக்கு ரிஷப் பன்ட் மிகப்பெரும் உதவியாக இருப்பார் என்று ராஸ் டைலர் தெரிவித்துள்ளார்.

டெஸ்ட் தொடரையே டி20 தொடர் அடித்து விளையாடும் திறமை படைத்த ரிஷப் பண்ட் சமீபகாலமாக லிமிடெட் ஓவர் போட்டிகளில் தன்னுடைய பேட்டிங் திறமையை நிரூபிக்க முடியாமல் திணறி வருகிறார்.

கில், பண்ட்

இந்திய அணி பரிதாபமாக இருந்த நிலையிலெல்லாம் தன்னுடைய அபாரமான பேட்டிங் திறமையை வெளிப்படுத்தி இந்திய அணிக்கு பல வெற்றிகளை பெற்றுக் கொடுத்த ரிஷப் பண்ட் அவ்வப்போது தேவையில்லாத ஷாட்களை அடிக்க முயன்று தன்னுடைய விக்கெட்டை இழப்பதை வழக்கமாகி கொண்டு வருகிறார். இருந்த போதும் இவருடைய திறமையின் மீது நம்பிக்கை வைத்து இந்திய அணி பல வாய்ப்புகளை இவருக்கு கொடுத்து வருகிறது.

அந்த வகையில் நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணியில் துவக்க வீரராக ரிஷப் பண்ட் தேர்ந்தெடுக்கப்பட்டார். மிடில் ஆர்டரில் பேட்டிங்கில் சொதப்பினாலும் துவக்கவீராக சிறப்பாக செயல்படுவார் என எதிர்பார்க்கப்பட்டார். ஆனால் எதிர்பார்ப்பதெல்லாம் நடந்து விடாது என்பதுபோல் ரிஷப் பண்டின் பேட்டிங் மிக மோசமாக இருந்தது, சொற்பரன்களில் தன்னுடைய விக்கெட்டை இழந்து இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த உலக கிரிக்கெட் வட்டத்திலும் ரிஷப் பண்ட் விமர்சிக்கப்பட்டு வருகிறார்.இவரோட திறமை தெரியாம எல்லாரும் திட்டிட்டு இருக்கீங்க... ரிஷப் பண்ட்டிற்கு முன்னாள் வீரர் ஆதரவு !! 1

 

ஆனால் ரிஷப் பண்ட் எதிர்கால இந்திய அணியில் முக்கியமான வீரராக இருப்பார் என்பதால் இந்த மோசமான நிலையிலும் ரிஷப் பண்டிர்கு ஆதரவான தங்களுடைய கருத்துக்களை முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர்.

 

அந்த வகையில், நடைபெற்று முடிந்த நியூசிலாந்து மற்றும் இந்திய இடையிலான டி20 தொடர் குறித்து அதிகப்படியான கருத்துக்களை தெரியப்படுத்தி வரும் நியூசிலாந்து அணியின் முன்னாள் ஜாம்பவான் ராஸ் டெய்லர், என்னதான் ரிஷப் பண்ட் மோசமாக பேட்டிங் செய்தாலும் அவர் இந்திய அணிக்கு கிடைத்த மிகப்பெரிய சொத்து என்று பாராட்டி பேசியுள்ளார்.

இவரோட திறமை தெரியாம எல்லாரும் திட்டிட்டு இருக்கீங்க... ரிஷப் பண்ட்டிற்கு முன்னாள் வீரர் ஆதரவு !! 2

இதுகுறித்து ராஸ் டைய்லர் பேசுகையில்,“மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்தாலும் அல்லது துவக்க வீரராக பேட்டிங் செய்தாலும் ரிஷப் பண்டின் பேட்டிங் பவர்ஃபுல்லாக (powerfull) உள்ளது என நினைக்கிறேன். லெக் ஸ்பின்,அல்லது இடது கை சுழற்பந்துவீச்சாளர்கள் பந்து வீசினால் அதை இவர் அடித்து ஆடுகிறார் இந்த பேட்டிங் டெக்னிக் மிக மோசமானது தான் ஆனால் அது சில நேரம் அவருக்கு கை கொடுக்கிறது, ரிஷப் பண்டிர்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து அதிகப்படியான வாய்ப்புகளை கொடுக்க வேண்டும், துவக்க வீரராகவோ அல்லது மிடில் ஆர்டரிலோ ரிஷப் பண்டிர்க்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். தற்போது தடுமாறினாலும் நிச்சயம் ரிஷப் பண்ட் எதிர்காலத்தில் இந்திய அணியின் சொத்தாக உருவெடுப்பார் ”என்று ராஸ் டைய்லர் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published.