இதுக்கு நாங்க நொறுப்பல்ல ! சொந்த நாட்டு வீரர்களை கைவிட்ட ஆஸி கிரிக்கெட் வாரியம் ! 1

இதுக்கு நாங்க நொறுப்பல்ல ! சொந்த நாட்டு வீரர்களை கைவிட்ட ஆஸி கிரிக்கெட் வாரியம் !

14வது ஐபிஎல் சீசன் தற்போது சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. இதுவரை 29 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளது. இதில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 8 போட்டிகளில் 6 வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கிறது.

இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பெங்களூர் அணியும் தலா 10 புள்ளிகள் பெற்று அடுத்தடுத்த இடத்தில் இருக்கிறது. இந்நிலையில், இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீயாய் பரவி வருகிறது. இதனால் பல இந்தியர்கள் பாதித்தும் உயிரிந்தும் வருகின்றனர்.

இதுக்கு நாங்க நொறுப்பல்ல ! சொந்த நாட்டு வீரர்களை கைவிட்ட ஆஸி கிரிக்கெட் வாரியம் ! 2

கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாக அதிகமாக அவர்களுக்கு கொடுக்கப்படும் ஆக்சிஜன் சிலண்டர்கள் பற்றாகுறை ஏற்பட்டுள்ளது. இதனால் சச்சின், பாட் கம்மின்ஸ், தவான் போன்ற கிரிக்கெட் வீரர்கள் நிதியுதவி செய்து வருகின்றனர்.

இதன் காரணமாக டெல்லி அணியில் இருந்து தமிழக வீரர் அஸ்வின் ஐபிஎல்லை விட்டு வெளியேறினார். இதையடுத்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் இருந்து ஆடம் ஜம்பா மற்றும் கேன் ரிச்சர்ட்சன் ஆகிய இரண்டு ஆஸ்திரேலியா வீரர்களும் வெளியேறினர்.

இதுக்கு நாங்க நொறுப்பல்ல ! சொந்த நாட்டு வீரர்களை கைவிட்ட ஆஸி கிரிக்கெட் வாரியம் ! 3

இவர்களைத் தொடர்ந்து ராஜஸ்தான் அணியில் விளையாடி வந்த ஆஸ்திரேலிய வீரர் ஆண்ட்ரூ டை-யும் ஐபிஎல்லில் இருந்து வெளியேறினார். இவ்வாறு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வீரர்கள் வெளியேறுவது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருந்தது. இந்நிலையில், இந்தியாவில் கொரோனா அதிகமாக இருப்பதால் இந்தியாவிலிருந்து மற்ற நாடுகளுக்கு விமான சேவையை நிறுத்தி வைத்துள்ளனர்.

குறிப்பாக இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா விமான சேவை மே 15ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஐபிஎல்லில் இருந்து வெளியேறிய ஆஸ்திரேலிய வீரர்கள் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.

இதுக்கு நாங்க நொறுப்பல்ல ! சொந்த நாட்டு வீரர்களை கைவிட்ட ஆஸி கிரிக்கெட் வாரியம் ! 4

இதுகுறித்து சொந்த நாட்டிடம் உதவி கேட்ட போது ஆஸி. நாட்டு பிரதமர் ஸ்காட் மோரிசன் “வீரர்கள் தங்களது சொந்த ஏற்பாடுகளை செய்துக்கொள்ள வேண்டும்” என்று கூறிவிட்டார்.

இதையடுத்து, தற்போது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் சிஇஓ நிக் ஹாக்லி கூறுகையில் “ஐபிஎல்லில் கலந்துகொண்ட வீரர்களை தனி விமானத்தின் மூலம் சொந்த நாடு அழைக்கும் திட்டமில்லை” என்று கூறியுள்ளார். இதனால் ஆஸ்திரேலிய வீரர்கள் தற்போது என்ன செய்வது என்று புரியாமல் தவித்து வருகின்றனர்.

இதுக்கு நாங்க நொறுப்பல்ல ! சொந்த நாட்டு வீரர்களை கைவிட்ட ஆஸி கிரிக்கெட் வாரியம் ! 5

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *