ஒரு இந்திய வீரருக்கு கூட இடம் இல்லை... டி.20 உலகக்கோப்பை தொடருக்கான சிறந்த 11 வீரர்களை தேர்ந்தெடுத்து அறிவித்த ஐசிசி !! 1

நடந்து முடிந்த டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான சிறந்த ஆடும் லெவனை ஐசிசி., தேர்ந்தெடுத்து அறிவித்துள்ளது.

டி.20 போட்டிகளுக்கான சாம்பியனை தீர்மானிக்கும் டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டி நேற்று நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலிய அணியும் நியூசிலாந்து அணியும் மோதின.

துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

ஒரு இந்திய வீரருக்கு கூட இடம் இல்லை... டி.20 உலகக்கோப்பை தொடருக்கான சிறந்த 11 வீரர்களை தேர்ந்தெடுத்து அறிவித்த ஐசிசி !! 2

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து அணி சார்பில் அதிகபட்சமாக கேன் வில்லியம்சன் 85 ரன்களும், கப்தில் 28 ரன்களும் எடுத்தனர்.

இதனையடுத்து 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை துரத்தி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு அந்த அணியின் துவக்க வீரரும் கேப்டனுமான ஆரோன் பின்ச் 5 ரன்னில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தார். மற்றொரு துவக்க வீரரான டேவிட் வார்னர் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 53 ரன்கள் எடுத்து கொடுத்தார்.

ஒரு இந்திய வீரருக்கு கூட இடம் இல்லை... டி.20 உலகக்கோப்பை தொடருக்கான சிறந்த 11 வீரர்களை தேர்ந்தெடுத்து அறிவித்த ஐசிசி !! 3

மூன்றாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய மிட்செல் மார்ஸ் டேவிட் வார்னரை விட மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 50 பந்துகளில் 77 ரன்களும், கிளன் மேக்ஸ்வெல் 18 பந்துகளில் 28 ரன்களும் எடுத்ததன் மூலம் 18.5 ஓவரிலேயே இலக்கை ஈசியாக எட்டிய ஆஸ்திரேலிய அணி முதன்முறையாக டி.20 உலகக்கோப்பையை வென்று அசத்தியது.

இந்தநிலையில், இந்த தொடரின் சிறந்த ஆடும் லெவனை ஐசிசி., தேர்ந்தெடுத்து அறிவித்துள்ளது. ஐசிசி.,யால் தேர்ந்தெடுத்து அறிவிக்கப்பட்டுள்ள ஆடும் லெவனில் ஒரு இந்திய வீரருக்கு இடம் கிடைக்கவில்லை. பாகிஸ்தான் அணியின் கேப்டனான பாபர் அசாம் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஒரு இந்திய வீரருக்கு கூட இடம் இல்லை... டி.20 உலகக்கோப்பை தொடருக்கான சிறந்த 11 வீரர்களை தேர்ந்தெடுத்து அறிவித்த ஐசிசி !! 4

துவக்க வீரர்களாக டேவிட் வார்னர் மற்றும் ஜாஸ் பட்லரும் இடம்பெற்றுள்ளனர். அதே போல் மிடில் ஆர்டரில் பாபர் அசாம், அஸ்லன்கா மற்றும் மார்க்ரம் ஆகியோருக்கு இடம் கொடுத்துள்ள ஐசிசி., ஆல் ரவுண்டர்கள் வரிசையில் மொய்ன் அலி மற்றும் ஹசரங்கா ஆகியோருக்கு இடம் கொடுத்துள்ளது.

ஒரு இந்திய வீரருக்கு கூட இடம் இல்லை... டி.20 உலகக்கோப்பை தொடருக்கான சிறந்த 11 வீரர்களை தேர்ந்தெடுத்து அறிவித்த ஐசிசி !! 5

அதே போல் ஆடம் ஜாம்பா, ஹசில்வுட், டிரண்ட் பவுல்ட் மற்றும் நோர்கியா ஆகியோருக்கும் ஐசிசி., இடம் கொடுத்துள்ளது 12வது வீரராக ஷாகின் அப்ரிடி சேர்க்கப்பட்டுள்ளார்.

ஐசிசி., தேர்ந்தெடுத்து அறிவித்துள்ள சிறந்த ஆடும் லெவன்;

ஜாஸ் பட்லர், டேவிட் வார்னர், பாபர் அசாம், அஸ்லன்கா, மார்க்ரம், மொய்ன் அலி, ஹசரங்கா, ஆடம் ஜாம்பா, ஜோஸ் ஹசில்வுட், டிரண்ட் பவுல்ட், ஆன்ரிச் நோர்கியா. ஷாகின் அப்ரிடி (12வது வீரர்).

Leave a comment

Your email address will not be published.