தக்க வைத்து கொள்ளும் அளவிற்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஒரு இந்திய வீரர் கூட இல்லை என முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

இந்த வருடத்திற்கான ஐபிஎல் தொடர் பல்வேறு பிரச்சனைகளை கடந்து, கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடந்து முடிந்தது. இறுதி போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை அசால்டாக வீழ்த்திய ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி அசால்டாக ஐந்தாவது முறை கோப்பையை தட்டி சென்றது.

ஐபிஎல் தொடர் நடந்து முடிந்து இன்னும் ஒரு மாதம் கூட நிறைவடையாத நிலையில், அடுத்த வருட ஐபிஎல் தொடருக்கான தங்களது ஆலோசனைகளையும், கணிப்புகளையும் முன்னாள் வீரர்கள் பலர் தற்போதே கொடுக்க துவங்கிவிட்டனர்.

ஒருத்தன் கூட வொர்த் இல்ல; ஆகாஷ் சோப்ரா அதிரடி கருத்து !! 2

அதில் குறிப்பாக முன்னாள் இந்திய வீரரான ஆகாஷ் சோப்ரா அடுத்த ஐபிஎல் தொடர் குறித்து அதிகமான விசயங்களை பேசி வருகிறார். ஒவ்வொரு அணியும் அடுத்த வருட தொடருக்காக என்ன செய்ய வேண்டும், யாரை எல்லாம் தக்க வைத்து கொள்ள வேண்டும், யாரை எல்லாம் கழற்றிவிட வேண்டும் உள்பட பல்வேறு விசயங்கள் குறித்தும் தினமும் பேசி வரும் ஆகாஷ் சோப்ரா, சமீபத்தில் வெளியிட்டுள்ள புதிய வீடியோ ஒன்றில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி குறித்து பல்வேறு விசயங்களை பேசியுள்ளார்.

ஒருத்தன் கூட வொர்த் இல்ல; ஆகாஷ் சோப்ரா அதிரடி கருத்து !! 3

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி குறித்து ஆகாஷ் சோப்ரா பேசுகையில், “அடுத்த வருட தொடருக்கான முழுமையான ஏலம் நடத்தப்பட்டால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஜோஃப்ரா ஆர்ச்சர், பென் ஸ்டோக்ஸ் மற்றும் பட்லரை தக்க வைத்து கொள்ள வேண்டும். தக்க வைத்து கொள்ளும் அளவிற்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஒரு இந்திய வீரர் கூட இல்லை. சஞ்சு சாம்சன், ராகுல் திவாடியா, கார்த்திக் தியாகி மற்றும் ஸ்ரேயஸ் கோபல் போன்ற வீரர்கள் சிறப்பாக விளையாடினாலும், நிர்ணயிக்கப்பட்டுள்ள தகக் வைப்பு தொகையான 7 – 12 கோடி ரூபாய்க்கு இவர்கள் யாரும் தகுதியானவர்கள் இல்லை” என்று தெரிவித்தார்.

ஒருத்தன் கூட வொர்த் இல்ல; ஆகாஷ் சோப்ரா அதிரடி கருத்து !! 4

மேலும் பேசிய ஆகாஷ் சோப்ரா, “ஸ்டீவ் ஸ்மித் சிறந்த கேப்டன் தான் என்றாலும் ஐபிஎல் தொடருக்கு அது செட்டாகவில்லை. அதனால் ஸ்டீவ் ஸ்மித்தை கேப்டன் பதவியில் இருந்து நீக்கிவிட்டு இந்திய வீரர் ஒருவரை கேப்டனாக நியமித்து விட்டு அணி முழுவதையும் மாற்றியமைக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *