மோசமாக விளையாடினாலும் ரிஷப் பண்ட்டிற்கு தொடர்ந்து இடம் கிடைப்பதற்கு இது மட்டுமே காரணம்; முன்னாள் வீரர் சொல்கிறார் !! 1

ரிஷப் பண்டை இந்திய அணியிலிருந்து நீக்கிவிட்டால் இந்திய அணி மிகப்பெரும் சிக்கலை சந்திக்க நேரிடும் என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் ஐந்து டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது.

இந்த தொடரின் முதல் இரண்டு போட்டியில் படுதோல்வியை சந்தித்த இந்திய அணி, அடுத்ததாக நடைபெற்ற இரண்டு போட்டியிலும் பந்துவீச்சு, பேட்டிங் என இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டு இரண்டு போட்டியிலும் அபார வெற்றி பெற்று 2-2 என்ற கணக்கில் தொடரில் சமநிலையை அடைந்தது.

மோசமாக விளையாடினாலும் ரிஷப் பண்ட்டிற்கு தொடர்ந்து இடம் கிடைப்பதற்கு இது மட்டுமே காரணம்; முன்னாள் வீரர் சொல்கிறார் !! 2

முதல் இரண்டு போட்டியில் படுதோல்வியடைந்த இந்திய அணி, அடுத்த இரண்டு போட்டியில் மிரட்டல் வெற்றி பெற்றதற்கு இஷான் கிஷன், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, சாஹல் போன்றோரின் பங்களிப்புகள் முக்கியமானதாக இருந்தாலும், கேப்டனான ரிஷப் பண்ட் இந்த தொடரின் ஒரு போட்டியில் கூட சொல்லிக்கொள்ளும் அளவிற்கு விளையாடவில்லை.

 

இந்திய அணியின் கடந்த இரண்டு போட்டியிலும் வெற்றி பெற்றிருந்தாலும், ரிஷப் பண்ட் பேட்டிங்கில் மிக மோசமாக செயல்பட்டு வருவதை முன்னாள் வீரர்கள் பலர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

 

மேலும் இவரை கழட்டிவிட்டு உலக கோப்பை தொடரில் தரமான ஒரு வீரரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் இந்திய அணிக்கு பலரும் அறிவுரை வழங்கி வருகின்றனர்.

மோசமாக விளையாடினாலும் ரிஷப் பண்ட்டிற்கு தொடர்ந்து இடம் கிடைப்பதற்கு இது மட்டுமே காரணம்; முன்னாள் வீரர் சொல்கிறார் !! 3

ஆனால் ரிஷப் பண்ட் இந்திய அணியில் இடம் பெற்றிருப்பதால் இந்திய அணிக்கு இப்படி ஒரு நன்மை உள்ளது என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் மற்றும் கிரிக்கெட் வல்லுனர் ஆகாஷ் சோப்ரா செய்தியாளர்களின் சந்திப்பின் வாயிலாக இந்திய அணிக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

 

இது குறித்து ஆகாஷ் சோப்ரா பேசுகையில், “தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான தொடரில் ரிஷப் பண்ட் கேப்டனாக செயல்பட்டார், ஒரு அணியின் கேப்டன் என்று ஒருவரை நியமித்து விட்டால் அவருக்கு எந்த ஒரு ஆடிசனும்(Audition) தேவையில்லை, அவருடைய இடம் உறுதியாகிவிட்டது என்று நான் உட்பட அனைவரும் நினைத்தோம், ஏனென்றால் அவருடைய தலைமையின் கீழ் தான் அணி கட்டமைக்கப்படுகிறது, ஆனால் தற்பொழுது ரிஷப் பண்ட்டின் இடம் பறிபோய்விடுமோ என்ற நிலையில் உள்ளது, ஆனால் அவர் இந்திய அணிக்கு மிகவும் முக்கியமான ஒரு வீரர், ஏனென்றால் ஒட்டுமொத்த பேட்டிங் ஆர்டரிலும் இடதுகை பேட்ஸ்மேன் என்று ரிஷப் பண்ட் தான் உள்ளார், மற்ற அனைவரும் வலதுகை பேட்ஸ்மேன்கள், நமக்கு இஷான் கிஷன் இடம் பெறுவாரா என்பது தெரியவில்லை, மேலும் ஜடேஜா அணியில் இருந்தால் அவர் கடைசியாக தான் பேட்டிங் செய்ய வருவார். இதன் காரணமாக ரிஷப் பண்ட் இந்திய அணியில் இருப்பது மிகவும் முக்கியமான ஒன்று என்று ஆகாஷ் சோப்ரா பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Leave a comment

Your email address will not be published.