இவனுகள வச்சிக்கிட்ட என்ன பண்றதுன்னே தெரியல; ஜெயவர்த்தனே வேதனை !! 1

இவனுகள வச்சிக்கிட்ட என்ன பண்றதுன்னே தெரியல; ஜெயவர்த்தனே வேதனை

சன் ரைசர்ஸ் அணிக்கு எதிராக தோற்கவே முடியாத 118 ரன்கள் இலக்கை எதிர்த்து மும்பை இந்தியன்ஸ் 87 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது, அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஜெயவர்தனேயை கடும் ஏமாற்றத்துக்கு ஆளாக்கியுள்ளது.

“எங்களை நாங்களே இந்த நிலைக்கு ஆளாக்கிக் கொண்டோம் யாரைத்தான் குற்றம் சொல்வது? தோல்வியடைந்த போட்டிகளில் நன்றாகத்தான் ஆடினோம், இந்தப் போட்டிகள் எந்தப்பக்கம் வேண்டுமானாலும் சென்றிருக்கலாம்.

இவனுகள வச்சிக்கிட்ட என்ன பண்றதுன்னே தெரியல; ஜெயவர்த்தனே வேதனை !! 2

ஆனால் இந்தப் போட்டி (சன் ரைசர்ஸ்) மிகவும் ஏமாற்றமளிக்கிறது, பிட்சில் ஏதோ பூதங்கள் இருப்பது போல் ஆடினோம். நாங்கள் பொறுப்பை எடுத்துக் கொள்ளவில்லை, இதுதான் கடும் ஏமாற்றமளிக்கிறது. பனிப்பொழிவு எதிர்பார்த்தது போல் வந்தது, ஆனால் ஒருவரும் பொறுப்பெடுத்துக் கொள்ளவில்லை. இது துயரத்தை அளிக்கிறது.

ஹர்திக் பாண்டியாவுடன் தொடக்கத்திலிருந்தே பணியாற்றி வருகிறோம். சீசனுக்கு முந்தியும் அவருடன் பயிற்சியில் ஈடுபட்டோம். நம் வீரர்களையும் நாங்கள் ஆய்வுக்குட்படுத்துகிறோம்.

இவனுகள வச்சிக்கிட்ட என்ன பண்றதுன்னே தெரியல; ஜெயவர்த்தனே வேதனை !! 3

ஒவ்வொரு ஆண்டும் ஒரேமாதிரி ஆட முடியாது, வீரர்கள் வளர்ச்சியடைய வேண்டும். ஹர்திக் போன்ற வீரர்கள் கற்றுக் கொள்வார்கள். கடின உழைப்புத் தேவைப்படுகிறது. வெறும் திறமை மட்டும் நம்மைக் கொண்டு சேர்க்காது. சர்வதேச பவுலர்கள் வந்து பல்வேறு விஷயங்களை நமக்கு எதிராக செலுத்தும் போது அதை கூர்ந்து கவனித்து கற்றுக் கொள்ள வேண்டும். வளர்ச்சியடைய வேண்டும் இல்லையெனில் சீராக ஆட முடியாது.

இருக்கும் வீரர்களைக் கொண்டுதான் ஆட முடியும். வீரர்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். ஆனாலும் சில மாற்றங்களைச் செய்ய வேண்டியுள்ளது. இது கூட கொஞ்சம் சீக்கிரமானதுதான், எனக்கு இந்தத் தோல்வியை சிந்திக்க 24 மணி நேரங்கள் வேண்டும். தோல்வி குறித்து உணர்ச்சிவயப்படக்கூடாது என்பது முக்கியம்” என்றார் ஜெயவர்தனே.

இவனுகள வச்சிக்கிட்ட என்ன பண்றதுன்னே தெரியல; ஜெயவர்த்தனே வேதனை !! 4

இந்த போட்டி குறித்து மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறியதாவது, “இது முழுக்க முழுக்க எங்கள் அனைவரின் தவறு, யாரையும் தனியாக சுட்டிக்காட்டி குறை சொல்ல விரும்பவில்லை. நான் உள்பட சில பேட்ஸ்மேன்கள் மிக மோசமான ஷாட் அடித்ததன் காரணமாகவே விக்கெட்டை இழந்தோம். எங்கள் அணியின் பந்துவீச்சாளர்கள் மிக சிறப்பாகவே பந்துவீசி ஹைதரபாத் அணியை 118 ரன்களில் கட்டுப்படுத்தினர், ஆனால் பேட்ஸ்மேன்களின் பொறுப்பற்ற ஆட்டமே தோல்விக்கு காரணமாக அமைந்துவிட்டது. இந்த போட்டியில் நாங்கள் நிறைய தவறுகளை செய்துவிட்டோம், எதனையையும் தனியாக சுட்டிக்காட்ட விரும்பவில்லை, ஆனால் அடுத்தடுத்த போட்டிகளில் தவறுகளை சரி செய்து கொள்வோம்” என்று தெரிவித்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *