உமேஷ் யாதவுக்கு அணியில் இடம்; டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு !! 1

ஆஸ்திரேலிய அணியுடனான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் தொடர் முடிந்த கையோடு இந்திய கிரிக்கெட் அணி துபாயில் இருந்தே ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. ஆஸ்திரேலியா செல்லும் இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலிய அணியுடன் 3 ஒருநாள், 3 டி20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரில் ஆடவுள்ளது.

இந்தநிலையில், ஆஸ்திரேலிய அணியுடனான கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை பி.சி.சி.ஐ இன்று அறிவித்துள்ளது.

உமேஷ் யாதவுக்கு அணியில் இடம்; டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு !! 2

காயம் காரணமாக தவித்து வரும் ரோஹித் சர்மாவின் பெயர் ஆஸ்திரேலியா அணியுடனான கிரிக்கெட் தொடருக்கான அணியில் இடம் பெறவில்லை.

டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை பொறுத்தவரையில் புஜாரா, ரஹானே, ஹனுமா விஹாரி போன்ற வழக்கமான அனைத்து வீரர்களும் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

அதே போல் ப்ரித்வி ஷா, மாயன்க் அகர்வால், சுப்மன் கில் போன்ற இளம் பேட்ஸ்மேன்களுக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

உமேஷ் யாதவுக்கு அணியில் இடம்; டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு !! 3

வேகப்பந்து வீச்சாளர்கள் வரிசையில், முகமது ஷமி, உமேஷ் யாதவ், சைனி, முகமது சிராஜ் ஆகியோரும், சுழற்பந்து வீச்சாளர்கள் வரிசையில் குல்தீப் யாதவ், ஜடேஜா, அஸ்வின் போன்ற வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

டெஸ்ட் தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி;

விராட் கோஹ்லி (கேப்டன்), மாயன்க் அகர்வால், ப்ரித்வி ஷா, கே.எல் ராகுல், சட்டீஸ்வர் புஜாரா, ரஹானே, ஹனுமா விஹாரி, சுப்மன் கில்,விர்திமான் சஹா (விக்கெட் கீப்பர்), ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ஜஸ்ப்ரிட் பும்ராஹ், முகமது ஷமி, உமேஷ் யாதவ், நவ்தீப் சைனி, குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், முகமது சிராஜ்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *