இந்திய வீரர்களுக்கு வந்த புதிய சிக்கல்; ரசிகர்களுக்கு அனுமதி இல்லை !! 1

இந்தியா இங்கிலாந்து இடையேயான ஒருநாள் போட்டிகளை காண ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் நான்கு டெஸ்ட் போட்டிகள், ஐந்து டி.20 போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இதில் முதலில் நடைபெற்று வரும் டெஸ்ட் தொடர் நிறைவடைந்த பிறகு, அடுத்ததாக டி.20 தொடர் நடைபெற உள்ளது, அதனை தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் புனே மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்திய வீரர்களுக்கு வந்த புதிய சிக்கல்; ரசிகர்களுக்கு அனுமதி இல்லை !! 2

மஹாராஷ்டிராவில் இன்னும் கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்படாததால், புனேயில் நடத்தப்படும் போட்டிக்கு ரசிகர்களை அனுமதித்தால் கொரோனா வைரஸ் பரவல் மேலும் அதிகரிக்கலாம் என்ற அச்சம் எழுந்தது. இதனால், ரசிகர்கள் இன்றி நடத்த பிசிசிஐ சார்பில் ஆலோசிக்கப்பட்டது. போட்டி நடத்தப்படும் இடத்தை மும்பைக்கு மாற்றலாம் என்ற தகவலும் வெளியானது.

இந்நிலையில், புனேயில் 3 ஒருநாள் போட்டிகளையும் ரசிகர்கள் இன்றி நடத்துவதற்கு மகாராஷ்டிர மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, மகாராஷ்டிர கிரிக்கெட் சங்க தலைவர் விகாஸ் ககாட்கர் சந்திப்புக்கு பிறகு போட்டிக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்திய வீரர்களுக்கு வந்த புதிய சிக்கல்; ரசிகர்களுக்கு அனுமதி இல்லை !! 3

மகாராஷ்டிராவில் கொரோனா தொற்றின் தற்போதைய தீவிரத்தை கவனத்தில் கொண்டு, முதலமைச்சரின் அறிவுறுத்தலுக்கு பிறகு, பார்வையாளர்கள் இல்லாமல் போட்டிகளுக்கு அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டதாக கிரிக்கெட் சங்கம் கூறி உள்ளது.

ரசிகர்கள் இல்லாமல் நடத்தப்பட்ட இந்தியா இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது, இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றியை பதிவு செய்த போது பேசிய இந்திய கேப்டன் விராட் கோலி, இந்த வெற்றிக்கு ரசிகர்கள் கொடுத்த உத்வேகம் தான் காரணம் என பேசியிருந்தார். ரசிகர்களின் ஊக்கம் ஒவ்வொரு வீரருக்கும் மிக முக்கியமாக பார்க்கப்படும் நிலையில், தற்போது ஒருநாள் தொடர் ரசிகர்கள் இல்லாமல் நடக்க உள்ளது இந்திய அணிக்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *