அத பத்தி கொஞ்சம் கூட கவலையில்லை; வாசிங்டன் சுந்தர் பெருந்தன்மை !! 1

இங்கிலாந்து அணியுடனான நான்காவது டெஸ்ட் போட்டியில் வெறும் 4 ரன்னில் சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டது குறித்து தனக்கு எந்த கவலையும் இல்லை என வாசிங்டன் சுந்தர் பெருந்தன்மையுடன் தெரிவித்துள்ளார்.

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகள் கொண்ட இந்திய அணி இரண்டு போட்டியிலும், இங்கிலாந்து அணி ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ள நிலையில், இரு அணிகள் இடையேயான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்றது.

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணிக்கு, பென் ஸ்டோக்ஸ் அரைசதம் அடித்து கை கொடுத்ததன் மூலம், இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 205 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

அத பத்தி கொஞ்சம் கூட கவலையில்லை; வாசிங்டன் சுந்தர் பெருந்தன்மை !! 2

இந்திய அணியில் அதிகபட்சமாக அக்‌ஷர் பட்டேல் 4 விக்கெட்டுகளையும், ரவிச்சந்திர அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தனர்.

இதனையடுத்து தனது முதல் இன்னிங்ஸை துவங்கிய இந்திய அணிக்கு ரோஹித் சர்மாவை தவிர மற்ற அனைத்து சீனியர் வீரர்களும் ஏமாற்றம் கொடுத்தாலும், ரிஷப் பண்ட் மற்றும் வாசிங்டன் சுந்தர் ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தின் மூலம் போட்டியின் இரண்டாம் நாளான நேற்றைய ஆட்டநேர முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 294 ரன்கள் எடுத்திருந்தது.

இதனையடுத்து மூன்றாம் நாளான இன்றைய ஆட்டத்திலும் வாசிங்டன் சுந்தர் தொடர்ந்து பொறுப்பாக விளையாடினாலும், அக்‌ஷர் பட்டேலுக்கு பிறகு களமிறங்கிய வீரர்கள் வாசிங்டன் சுந்தருக்கு சரியான ஒத்துழைப்பு கொடுக்காமல் வந்த வேகத்தில் விக்கெட்டை இழந்ததால் இந்திய அணி 365 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இறுதி வரை ஆட்டமிழக்காத வாசிங்டன் சுந்தர் 96 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

அத பத்தி கொஞ்சம் கூட கவலையில்லை; வாசிங்டன் சுந்தர் பெருந்தன்மை !! 3

இதனையடுத்து இரண்டாவது இன்னிங்ஸை துவங்கிய இங்கிலாந்து அணிக்கு டேனியல் லாரன்ஸ் 50 ரன்களும், ஜோ ரூட் 30 ரன்களும் எடுத்து ஓரளவிற்கு கை கொடுத்தாலும் மற்ற வீரர்கள் அனைவரும் அக்‌ஷர் பட்டேல் மற்றும் அஸ்வினின் பந்துவீச்சை எதிர்கொள்ளா முடியாமல் மிக சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து அடுத்தடுத்து வெளியேறியதால் 135 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இங்கிலாந்து அணி, இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

இங்கிலாந்து அணியுடனான இந்த அபார வெற்றி இந்திய ரசிகர்களுக்கு மிகப்பெரும் மகிழ்ச்சியை கொடுத்திருந்தாலும், மறுபுறம் கடைசி டெஸ்ட் போட்டியில் மிக சிறப்பாக விளையாடிய வாசிங்டன் சுந்தர் வெறும் 4 ரன்னில் சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டது கவலையையும் கொடுத்தது. முன்னாள் வீரர்கள் பலரே வாசிங்டன் சுந்தர் சதத்தை தவறவிட்டது குறித்து ஓபனாக வேதனை தெரிவித்து வந்தனர்.

அத பத்தி கொஞ்சம் கூட கவலையில்லை; வாசிங்டன் சுந்தர் பெருந்தன்மை !! 4

இந்தநிலையில், இது குறித்து பேசியுள்ள வாசிங்டன் சுந்தர் சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டது குறித்து தனக்கு எந்த கவலையும் இல்லை என தெரிவித்துள்ளார்.

இது குறித்து சுந்தர் பேசுகையில், “சொந்த மண்ணில் தொடரை வென்றுள்ளது மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டது குறித்து எனக்கு சிறிதளவு கூட கவலை இல்லை. எனக்கான நேரம் வரும் போது நான் சதம் அடிக்க தான் போகிறேன். இந்திய அணியின் வெற்றியில் எனது பங்கும் உள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. உண்மையை சொல்ல வேண்டுமென்றால் ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு இலகுவாக இருந்தது. ஸ்டோக்ஸ், ஆண்டர்சன் போன்ற வீரர்கள் மிக சிறப்பாக பந்துவீசினர்” என்று தெரிவித்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *