அனில் கும்ப்ளே – விராட் கோலி மோதல் பற்றி முழுதும் தெரியாமல் ஒன்றும் பேச முடியாது என முன்னாள் இந்திய அணியின் கேப்டன் சவுரவ் கங்குலி கூறினார். அனில் கும்ப்ளே ராஜினாமா செய்த காரணத்தை பற்றி கேட்டபோது, அவற்றை பற்றி ஒன்றும் பேச போவதில்லை என கூறினார்.
“அவர்கள் சீனியர், போதிய அளவு கிரிக்கெட் விளையாடி இருக்கின்றனர். பிரச்சனை அவர்களுக்குள். நாம் தலையிட முடியாது. நான் அவர்களின் அறையில் இல்லை, அதனால் அவர்களுக்குள் என்ன நடந்தது என்று தெரியாது. பயிற்சியாளராக தொடரப்போவது இல்லை என்று முடிவில் இருந்தார் மட்டும் என்பது மட்டும் தான் எங்களுக்கு தெரியும்,” என்று சவுரவ் கங்குலி கூறினார்.
கிரிக்கெட் நிர்வாக குழுவில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் வி.வி.எஸ். லட்சுமண் ஆகியோருடன் சவுரவ் கங்குலியும் இருக்கிறார். கும்ப்ளே – கோலி பிரச்சனையை தீர்க்க கிரிக்கெட் நிர்வாக குழு மற்றும் இந்திய கிரிக்கெட் வாரியம் எவ்வளவோ முயற்சி செய்தது. ஆனால், ஒன்றும் எடுபடி ஆகவில்லை.
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு முன்பாக இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகினார் முன்னாள் இந்திய கேப்டன் அனில் கும்ப்ளே.
“என்னால் பதில் அளிக்க முடியவில்லை. ஏனென்றால், இது அனில் கும்ப்ளேவின் முடிவு. எனக்கு ஒன்றும் தெரியாது. அவரை ராஜினாமா செய்ய விராட் தான் கூறினாரா என்பது கூட தெரியாது. இனி என்னால் ஒன்றும் சொல்ல முடியாது,” என்று அவர் மேலும் கூறினார்.
பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க கடைசி நாளை அதிகரித்ததாக தகவல் வந்தது.
“நான் திங்கட்கிழமை மும்பை செல்கிறேன். தற்போது, இந்திய அணி விளையாடி வருகிறது. கடைசி நாளை அதிகரித்தார்களா என்பது தெரியவில்லை. பார்ப்போம்,” என கங்குலி தெரிவித்தார்.