மோர்கன், தினேஷ் கார்த்திக் வேண்டாம்… இவரை கேப்டனாக்கலாம்; அட்வைஸ் கொடுக்கும் ஆகாஷ் சோப்ரா !! 1

அடுத்த வருட கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக இளம் வீரர் சுப்மன் கில்லை நியமிக்க வேண்டும் என முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

இந்த வருடத்திற்கான ஐபிஎல் தொடர் பல்வேறு பிரச்சனைகளை கடந்து, கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடந்து முடிந்தது. இறுதி போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை அசால்டாக வீழ்த்திய ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி அசால்டாக ஐந்தாவது முறை கோப்பையை தட்டி சென்றது.

ஐபிஎல் தொடர் நடந்து முடிந்து இன்னும் ஒரு மாதம் கூட நிறைவடையாத நிலையில், அடுத்த வருட ஐபிஎல் தொடருக்கான தங்களது ஆலோசனைகளையும், கணிப்புகளையும் முன்னாள் வீரர்கள் பலர் தற்போதே கொடுக்க துவங்கிவிட்டனர்.

மோர்கன், தினேஷ் கார்த்திக் வேண்டாம்… இவரை கேப்டனாக்கலாம்; அட்வைஸ் கொடுக்கும் ஆகாஷ் சோப்ரா !! 2

அதில் குறிப்பாக முன்னாள் இந்திய வீரரான ஆகாஷ் சோப்ரா அடுத்த ஐபிஎல் தொடர் குறித்து அதிகமான விசயங்களை பேசி வருகிறார். ஒவ்வொரு அணியும் அடுத்த வருட தொடருக்காக என்ன செய்ய வேண்டும், யாரை எல்லாம் தக்க வைத்து கொள்ள வேண்டும், யாரை எல்லாம் கழற்றிவிட வேண்டும் உள்பட பல்வேறு விசயங்கள் குறித்தும் தினமும் பேசி வரும் ஆகாஷ் சோப்ரா, சமீபத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக இளம் வீரர் சுப்மன் கில்லை நியமிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மோர்கன், தினேஷ் கார்த்திக் வேண்டாம்… இவரை கேப்டனாக்கலாம்; அட்வைஸ் கொடுக்கும் ஆகாஷ் சோப்ரா !! 3

இது குறித்து ஆகாஷ் சோப்ரா பேசுகையில், அடுத்த வருட ஐபிஎல் தொடருக்காக முழுமையான ஏலம் நடத்தப்பட்டால், கொல்கத்தா அணி இயன் மோர்கனை தக்க வைத்து கொள்ளாது என்றே நினைக்கிறேன். சுப்மன் கில், ஆண்ட்ரியூ ரசல் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோரை மட்டுமே கொல்கத்தா அணி தக்க வைத்து கொள்ளும் என்று நினைக்கிறேன், இதுதவிர வேறு வீரர்களை தக்க வைத்து கொள்ள கொல்கத்தா அணி நினைக்காது. நான் கூறிய மூன்று வீரர்களை மட்டுமே கொல்கத்தா அணி தக்க வைத்து கொண்டு சுப்மன் கில்லை கொல்கத்தா அணியின் கேப்டனாக நியமித்தால் அது நிச்சயம் கொல்கத்தா அணிக்கு பெரிய மாற்றத்தை கொடுக்கும். சுப்மன் கில்லிற்கு நிர்வாகிகள் மற்றும் பயிற்சியாளர்கள் ஆதரவு இருந்தால் யோசிக்காமல் அவரை கேப்டனாக்கலாம், டெல்லி அணியை ஸ்ரேயஸ் ஐயர் வழிநடத்தி வருவதை போன்று சுபமன் கில்லும் கொல்கத்தா அணியை சிறப்பாக வழிநடத்துவார் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.

மோர்கன், தினேஷ் கார்த்திக் வேண்டாம்… இவரை கேப்டனாக்கலாம்; அட்வைஸ் கொடுக்கும் ஆகாஷ் சோப்ரா !! 4

மேலும் பேசிய ஆகாஷ் சோப்ரா கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இனியும் சுனில் நரைன் மற்றும் பேட் கம்மின்ஸை சுமந்து கொண்டு சுத்த கூடாது, அவர்களை கழற்றிவிடுவதே கொல்கத்தா அணிக்கு பயனுள்ளதாக இருக்கும். இருவரையும் நீக்கினாலே கொல்கத்தா அணிக்கு அதிகமான பணமும் கிடைக்கும் அதை வைத்து திறமையான பல வீரர்களை எடுக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *